பொதுபல சேனா, ஜம்மியத்துல் உலமாக்கு அனுப்பிய கடிதம் இதுதான்..

-விடிவெள்ளி-
அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை ஏனைய மதங்­களை அவ­ம­திப்­பது இஸ்லாம் மதத்­துக்கு எதி­ரா­ன­தாகும்’ என்று இஸ்லாம் மதத்­தைப்­பற்றி பொய்­களைக் சோடித்து ஊடக அறிக்­கை­யொன்று வெளி­யிட்­டுள்­ளது.

இவ்­வாறு புனித அல்­குர்­ஆனில் எந்த இடத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது என்­பதை உலமா சபை தெளி­வு ­ப­டுத்த வேண்டும் என பொது­ப­ல­சேனா அமைப்பு உல­மா­ச­பை­யிடம் கோரிக்கை விடுத்­துள்­ளது. 

பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சா­ர­தேரர் உல­மா­ச­பையின் தலை­வ­ருக்கு அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்­திலே இக்­கோ­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ‘ஏனைய மதங்­களை நிந்­திப்­பதும் அவ­ம­திப்­பதும் இஸ்­லாத்தின் போத­னை­க­ளுக்கு மாறா­ன­தாகும் இஸ்லாம் சமா­தானம் சக­வாழ்­வுக்­கான மத­மாகும். ஏனைய மத­ச­கோ­த­ரர்­க­ளது மத நட­வ­டிக்­கை­க­ளுக்கு மதிப்­ப­ளிக்க வேண்டும் என்று இஸ்லாம் போதித்­துள்­ளது என உலமா சபை ஊடக அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்­ளது. 


ஆனால் பிரச்­சி­னை­க­ளுக்கு கார­ண­மாக தௌஹீத் ஜமா அத்தின் பெயரை உலமா சபை குறிப்­பி­டு­வ­தி­லி­ருந்தும் தவிர்த்துக் கொண்­டுள்­ளது. மேலும் புனித குர்­ஆ­னுக்கு அவ­ம­திப்பு ஏற்­படும் வகையில் எந்த நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­ப­டக்­கூ­டாது. அவ்­வாறு செயற்­படும் நபர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுத்து தண்­டனை வழங்­கு­மாறும் அர­சாங்­கத்தை கேட்டுக் கொண்­டுள்­ளது. இஸ்­லா­மிய பூனை இந்த இடத்­திலே பையி­லி­ருந்து வெளியே பாய்­கி­றது. 

ஒரு­போதும் குர்­ஆனைப் பற்றிப் பேசக்­கூ­டாது. அவ்­வாறு பேசு­வ­தென்றால் அது குர்­ஆனை அவ­ம­திப்­ப­தாகும் என்று உலமா சபையின் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. பௌத்­தர்கள் என்ற வகையில் எந்­தவோர் மதத்­தையும் அவ­ம­தித்துப் பேசு­வதை நாம் மறுக்­கிறோம். நிரா­க­ரிக்­கிறோம் அத்­தோடு இந்தக் கொள்­கையை நாமும் கடைப்­பி­டிக்­கிறோம். ஒன்றைக் கூறி வேறொன்றைக் கடைப்­பி­டிப்­பது இஸ்­லாத்தின் போத­னையும் இஸ்­லா­மிய சம்­பி­ர­தா­யங்­க­ளு­மாகும்.

ஆனால் இது பௌத்த சம்­பி­ர­தா­யங்­க­ளுக்கும் அப்­பாற்­பட்­ட­தாகும். 

குர்­ஆனின் போத­னை­களை அப்­ப­டியே எமது சமூ­கத்­துக்குள் மறைத்து வைத்துக் கொண்­டி­ருப்­ப­தற்கு இஸ்­லாத்­துக்கு இட­ம­ளித்­தி­ருப்­ப­தா­னது ஆபத்­தா­ன­தாகும். இதன் மூலம் இந்­நாட்­டுக்கு ஏற்­படப் போகும் ஆபத்­தினைத் தடுப்­ப­தற்­கான கடைசி சந்­தர்ப்பம் இல்­லாமற் போய்­விடும். அதனால் குர்­ஆனின்  போத­னை­களை எமது சமூ­கத்­துக்குள் மறைத்து வைத்துக் கொண்­டி­ருக்க முடி­யாது. 

எமது நாட்டில் இட­ம­ளிக்­கப்­பட்­டுள்ள எந்த மத்­தி­னதும் போத­னைகள் மற்றும் கோட்­பா­டுகள் என்ன என்­பதை எமது சமூகம் அறிந்து கொள்ள வேண்டும். இவ்­வாறு அறிந்து கொள்­வ­தற்கு பௌத்­தர்­க­ளை போன்றே இந்­நாட்டில் வாழும் அனைத்து இனங்­க­ளுக்கும் உரிமை உண்டு. அதனால் இஸ்­லாத்தின் போத­னைகள் மற்றும் கொள்­கைகள் என்ன என்­பதை எமது சமூ­கத்தின் மத்­தியில் பகி­ரங்­க­மாகப் பேசு­வ­தற்கு சக­ல­ருக்கும் உரி­மை­யுண்டு அவ்­வாறு பேசு­வது ஒரு போதும் இஸ்­லாத்­ததை அவ­ம­திப்­ப­தாக அமை­யாது. இவ்­வா­றான பிரச்­சி­னை­களை பகி­ரங்கக் கலந்­து­ரை­யா­டல்கள் மூலமே தீர்த்துக் கொள்ள முடியும். 

ஐ.எஸ், ஜிஹாத் மற்றும் அனைத்து ஜிஹாத் அமைப்­பு­களும் இஸ்­லா­மிய போத­னை­க­ளின்­படி கொலைகள் புரிந்து பாரிய அழி­வு­களை ஏற்­ப­டுத்தி இவ்­வு­லகை அல்­லாஹ்வின் பாதை­யான இஸ்­லா­மிய நர­க­மாக மாற்­று­வ­தற்கு முயற்­சிக்­கின்­றன. இந்­நாட்டில் செயற்­பட்­டு­வரும் தௌஹீத், ஜமா அத், ஜிஹாத் அமைப்பு என்­பன ஓநாய்­களின் குட்­டி­களே அன்றி ஆட்டுக் குட்­டிகள் அல்ல என்­பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அவ்­வா­றெனில் ஜம்­இய்­யதுல் உலமா போன்ற அமைப்­பு­களின் நோக்கம் மற்றும் அவற்றின் இஸ்­லா­மிய பொறுப்­புகள் என்ன? ஜம்­இய்­யத்துல் உலமா சபை போன்ற அமைப்­புகள் இஸ்­லா­மிய போத­னை­க­ளுக்­கி­ணங்­கவே இயங்கி வரு­கின்­றன. அவற்றின் இலக்கும் அதுவே. 

ஐ.எஸ். என்­றாலும் தௌஹீத்  ஜமாஅத் என்­றாலும் ஜம்­இய்­யத்துல் உலமா என்­றாலும் இவை அனைத்தும் குர்­ஆனின் போத­னை­க­ளையே பின்­பற்றி செயற்­ப­டு­கின்­றன. இவை அனைத்தும் குர்­ஆனின் போத­னை­களை ஒரு எழுத்­துக்கும் மாற்­ற­மின்றி பின்­பற்­று­கின்­றன. நம்­பிக்கை வைத்­துள்­ளன. இந்த அமைப்­புகள் தாம் செயற்­படும் விதத்­திலே வேறு­பா­டுகள் உள்­ளன. 

முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யாக வாழும் இலங்கை போன்ற  நாடு­க­ளிலே ஜம்­இய்­யத்துல் உலமா போன்ற அமைப்­புகள் செயற்­ப­டு­கின்­றன. எமது நாட்டின் அதி­கா­ரத்தை இஸ்­லா­மி­ய­வா­திகள் கைப்­பற்றிக் கொள்­ளும்­வரை இஸ்­லாத்தின் மிலேச்­சத்­தனம், கொடூரம், அழி­வுக்­குட்­ப­டுத்தும் இஸ்­லா­மிய போத­னைகள் என்­ப­வற்றை சமூ­கத்­துக்குள் மறைத்து வைத்­தி­ருப்­ப­தையே இந்த ஜம்­இய்­யத்துல் உலமா சபை போன்ற அமைப்­புகள் கடைப்­பி­டிக்­கின்­றன. 

அந்த இலக்­கினை எய்தும் வரை பொய் மற்றும் ஏமாற்றும் வேலையைச் செய்­கி­றார்கள். 

உலமா சபை வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கையில் அடங்­கி­யுள்­ள­வைகள் அனைத்தும் முழுப்­பொய்­யாகும். இஸ்­லா­மிய அமைப்­பு­களின் நட­வ­டிக்­கை­க­ளினால் இஸ்­லாத்தின் உண்­மை­யான முகம் வெளிப்­படும் போது இஸ்­லா­மிய அமைப்­புகள் எமது சமூ­கத்தை பிழை­யான பாதையில் திருப்­பு­வ­தற்­கா­கவும் இஸ்­லா­மிய அமைப்­பு­களைப் பாது­காப்­ப­தற்­கா­கவும் இவ்­வாறு செயற்­ப­டு­கின்­றன.

இதனால் ஏனைய மதங்­களை அவ­ம­திக்கும் வகையில் செயற்­ப­டு­வது இஸ்­லாத்­துக்கு எதி­ரா­னது என்றும் இஸ்லாம் சமா­தா­னத்­தையும் ஒற்­று­மை­யையும் சக­வாழ்­வி­னையும் போதிக்கும் மார்க்கம் எனவும் எமது சமூகத்தின் மத்தியில் அறிக்கை வெளியிட்டுள்ள ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் ஏனைய இஸ்லாம் அமைப்புகள் பின்வரும் இஸ்லாமிய போதனைகளை ஏற்றுக் கொள்கின்றனவா? இல்லையேல் மறுக்கின்றனவா ? எதிர்க்கின்றனவா ?-என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. 

பின்வரும் விடயங்களில் தெளிவுகள் கோரப்பட்டுள்ளன. சஹீஹ் அல் புகாரி 2546/ சஹீஹ் முஸ்லிம் 2605 இஸ்லாமிய ஷரீஆ சட்டம். 
குர்ஆன் அத்தியாயங்கள்

3:28, 48:29, 3:85, 8:39, 9:05, 2:190, 9:123, 48:19, 48:20, 9:14, 3:28 சஹீஹ் அல் புஹாரி 1:2: 24 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.