நாம் விரும்பும் இடங்களில் சிலையை வைக்க முடியாதா? – ஞான சார

முஸ்­லிம்கள் விரும்­பிய இடங்­க­ளி­லெல்லாம் பள்­ளி­வா­சல்­களை நிர்­மா­ணித்துக் கொள்­கின்­றார்­களே? ஏன் நாம் விரும்பும் இடங்­களில் புத்தர் சிலையை வைத்­துக்­கொள்­ள­மு­டி­யாது.
மாணிக்­க­மடு கிரா­மத்து மலையில் புத்தர் சிலை வைக்­கப்­பட்­டுள்­ளதை சவா­லுக்­குட்­ப­டுத்த முடி­யாது என பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான சார தேரர் தெரி­வித்தார்.
கொழும்பு கிரு­லப்­ப­னை­யி­லுள்ள பௌத்த மத்­திய நிலை­யத்தில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர்கள் மாநாட்டில் பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான சார தேரர் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறினார்.
மாணிக்­க­மடு கிரா­மத்தில் தமி­ழர்­களும் முஸ்­லிம்­க­ளுமே வாழ்­கின்­றனர். அங்கு ஒரு சிங்­கள குடும்­பம் கூட இல்லை. இந்­நி­லையில் புத்தர் சிலை வைத்­தி­ருப்­பது இன நல்­லி­ணக்­கத்­திற்கு பாத­க­மாக அமை­யு­மல்­லவா? எனும் கேள்­விக்கு அவர் பதி­ல­ளிக்­கையில்;
புத்­தரின் சிலையை வைப்­பதால் இன நல்­லி­ணக்­கத்­திற்கு குந்­தகம் ஏற்­படும் என்று எவ­ராலும் கூற­மு­டி­யாது.
மதங்கள் நல்­லி­ணக்­கத்தை கெடுப்­ப­வை­யல்ல. இது ஒரு பௌத்த நாடு.
இந்­நாட்டில் எந்த இடத்­திலும் புத்தர் சிலையை வைக்­க­மு­டியும். இதனை எவ­ராலும் தடுக்க முடி­யாது அது எங்­க­ளது உரிமை என்றார்.
இறக்­காமம் மாணிக்­க­மடு கிரா­மத்தின் மலை­யுச்­சியில் பெரும்பான்மை இனத்தவர்கள் புத்தர் சிலையொன்றினை வைத்து தியான மண்டபம் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(விடிவெள்ளி)

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.