ஒட்டமாவாடியில் கோர விபத்து - மபாஸ் எனும் இளைஞன் உயிரிழப்பு


அபூ பயாஸ்


ஓட்டாமாவடி, ஹைராத் பள்ளி வீதியை சேர்ந்த மபாஸ் (28) என்பவர், இன்று அதிகாலை ஓட்டமாவடியில் வைத்து நடந்த கோர விபத்த்தில் காலமானார்.கொழும்பிலிருந்து அவரது வேனில் வந்து கொண்டிருக்கும்போது, தூக்கம் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த "ஆளடியான் "டிப்பருடன் மோதியே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.சம்பவம் நடைபெறுவதற்கு சற்று முன்பு அவரது மனைவியுடன் பேசும்போது, "ஓட்டமாவடி பாலத்துக்கருகில் வந்துவிட்டேன் " என்ற தகவலை சொல்லியிருக்கிறார்.இவரோடு பயணித்த மற்றயவர் சிறு காயங்களுளுடன் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சகோதரார் மபாஷின் ஜனாசா மட்டக்களாப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கிறது.வேன் அடையாளமே தெரியா வண்ணம் சிதைவடைந்து காணப்படுகிறது.
இவர்  வாழைச்சேனை புட்சிடி ( MMC FOOD CITY ) ஹனீபா ஹாஜியாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.வேகத்தை கட்டுப்படுத்தி, நிதானமாக பயணிப்போம்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.