வைத்தியர்கள் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் குதிப்பு - அசௌகரியத்தில் பொது மக்கள்

2017 ஆம் நிதிஆண்டுக்கான வரவு செலவு திட்டத்துக்கு எதிர்ப்பை தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக நோயாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வைத்தியர்களின் இந்த பணிபகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் இன்று காலை முதல் வெளிநோயாளர் பிரிவு முற்றாக இயங்குவதில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அங்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சில வைத்தியசாலைகளில் மாத்திரம் வைத்திய சேவைகள் தாதிமார்களால் முன்னெடுக்கப்படுவதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார். 

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.