ஷரிஆ சட்டத்தில் முஸ்லிம் பெண்களின் உரிமை தொடர்பில் பல பிரச்சினைகள் – சுதர்ஷினி

ஷரிஆ சட்டத்தின் பிரகாரம் முஸ்லிம் பெண்களுக்கு 12 வயதில் திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விவாகரத்திலும் பிரச்சினைகள் உள்ளது. எனவே முஸ்லிம் பெண்களின் உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.
நேற்று பாராளுமன்றத்தில் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செலவின தலைப்பிலான குழுநிலை விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்;
நாட்டின் பெண்களினதும் சிறார்களினதும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். தற்போது சில பெண்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
அது மாத்திரமன்றி சொத்துரிமை விடயத்திலும் பல பிரச்சினைகள் உள்ளன. இதன்போது பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது.
ஆகவே இது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.