போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா தலைமையில் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, டிசம்பர் 01 ஆம் திகதி முதல் ஒரு வாரத்துக்கு இலங்கை போக்குவரத்து சபை சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் தொழிநுட்ப துறை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.
தனியார் பஸ் சங்கங்கள் சில நாளை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.