அமெரிக்காவிலிருந்து 30 இலட்சம்பேரை வெளியேற்ற போகிறேன் - ட்ரம்பின் அதிரடி ஆரம்பம்

அமெரிக்காவில் வாழும் பிறநாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் 30 லட்சம் பேரை உடனடியாக வெளியேற்றப் போவதாக அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் அமெரிக்காவில் வாழும் பிறநாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் 30 லட்சம் பேரை உடனடியாக வெளியேற்றப் போவதாக நேற்று -13- அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தொலைக்காட்சிக்கு டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-

உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி இருக்கும் லட்சக்கணக்கானோரை வெளியேற்றுவேன். அதிபராக பதவியேற்ற உடன் 30 லட்சம் பேர் வெளியேற்றப்படுவார்கள். 

அதாவது, அமெரிக்காவில் வாழும் குற்றப் பின்னணி உள்ளவர்கள், ரவுடிகள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் உள்ளிட்டோர் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் உள்ளனர். அவர்களை கண்டறிய வேண்டும். 30 லட்சம் பேர் வரை கூட இருப்பார்கள்.

அவர்களை பிடித்து நாட்டிற்கு வெளியே அனுப்புவோம் அல்லது கைது செய்து சிறையில் அடைப்போம். அதேபோல் அமெரிக்க மெக்ஸிகோ எல்லைப் பகுதியில் உள்ள தடை சுவர்கள் உயர்த்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து குடியரசு கட்சியை சேர்ந்த தொழிலபதிபர் முன்னதாக டொனால்டு டிரம்ப் அதிரடியாக வெற்றி பெற்றார். 

கடந்த வாரம் அதிபராக தேர்வு செய்யப்பட பின்னர் டிரம்ப் அளித்த முதல் பேட்டி இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.