நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது - புதிய நோட்டில் டில்லி செங்கோட்டை , மங்கள்யான் புகைப்படம்

நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என இந்திய பிரதமர் மோடி திடீரென அறிவித்திருந்தார்.
ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
முக்கியமாக, ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வங்கியில் மாற்ற டிசம்பர் 30 ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக இன்று (9) மற்றும் நாளை (10) ஆகிய இரு நாட்களும் வங்கி ATM செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகள், இடுகாடுகள் ஆகிய இடங்களில் மட்டும் வரும் நவம்பர் 11ம் தேதி வரை ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும், 2005 க்கு முன்பு வரை அச்சிட்ட நோட்டுக்களை மட்டும் மாற்றிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய நேட்டுகள்
புதிய 2000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் செயற்கைக் கோளை பெருமைப்படுத்தும் வகையில் அதன் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது.

மங்கள்யான் :

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, 2013ம் ஆண்டு நவ., 5ம் தேதி, பி.எஸ்.எல்.வி.,-சி - 25 ராக்கெட் மூலம் ‛மங்கள்யான்' செயற்கைக்கோளை இந்தியா விண்ணில் செலுத்தியது. இந்தியாவின் இந்த சாதனைப் பயணத்தை அனைவரும் நினைவில் கொள்ளும் வகையில், புதிதாக வெளியாக உள்ள 2,000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. புதிய 500 ரூபாய் நோட்டில் டில்லி செங்கோட்டையின் படம் அச்சிடப்பட்டுள்ளது.

இதுவரை..

ரூ.50 - பார்லிமென்ட்
ரூ.100 - இமயமலைபழைய 
ரூ.500 - காந்தியின் தண்டி யாத்திரை
பழைய ரூ.1000 - தொழில்நுட்ப வளர்ச்சி
புதிய நோட்டுகளில்..

புதிய ரூ.500 - டில்லி செங்கோட்டை
புதிய ரூ.2000 - மங்கள்யான்

News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.