Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

முள்ளிப்பொத்தானை புஹாரி நகர் பாடசாலை வீதி ரூபா 6.5 மில்லியன் செலவில் புனரமைப்பு

Bublished By Online Ceylon on Tuesday, November 8, 2016 | 10:46 AM

எம்.ரீ. ஹைதர் அலி
திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ எம்.எஸ். தௌபீக் அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும்,  நீர் வழங்கல் நகர திட்டமிடல் அமைச்சருமான கௌரவ. அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின்கீழ் முள்ளிப்பொத்தானை புஹாரி நகர் பாடசாலை வீதி 6.5. மில்லியன் ரூபா செலவில்  புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

இதன் ஆரம்பகட்ட நிகழ்வு 2016.11.07ஆந்திகதி - திங்கட்கிழமை) இன்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், குழுத்தலைவரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஆர்.எம். அன்வர், தம்பலகாமம் பிரதேசத்தின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நதீர்க்கான், செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் உறுப்பினர் ஐயூப்கான் ஆசிரியர் மற்றும் கட்சியின் பிரதேச பிரமுகர்களின் பங்குபற்றுதளோடு ஆரம்பித்து வைக்கப்பட்டது.



நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved