சாரதியால் மாணவி ஒரு மாதமாக பாலியல் துஷ்பிரயோகம் - நீர்கொழும்பில் சம்பவம்

நீர்கொழும்பிலுள்ள சர்வதேச பாடசாலையொன்றில் தரம் 2 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவரை ஒரு மாத காலமாக பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த வாகன சாரதியை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த உத்தரவிட்டார். 
ஹொரதல் பிரடிகே  சுகுமல்  குமாரசிங்க என்ற 32 வயதுடைய  திருமணமான நபரே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவராவார். சந்தேக நபரை நீர்கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி கட்டுநாயக்காவிலிருந்து  நீர்கொழும்பிலுள்ள சர்வதேச பாடசாலைக்கு பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் சந்தேக நபரின் வாகனத்தில் பாடசாலைக்கு சென்று வந்துள்ளார். அந்த வாகனத்தில் பயணிக்கும் ஏனைய  மாணவர்கள் பாடசாலையருகில் இறங்கிய பின்னர் குறித்த மாணவியை வாகனத்தில் வைத்து சந்தேக  நபர் கடந்த ஒரு மாத காலமாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளார். 
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது பாட்டியிடம் கூறியுள்ளதை தொடர்ந்து சிறுமியின் பாட்டி நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சந்தேக நபரை  கைது செய்து பொலிஸார் மன்றில் ஆஜர் செய்த போது எதிர்வரும் 21  ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவதான் உத்தரவிட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.