பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உட்பட தேரர்கள் குழுவொன்றுடன் பௌத்த மத விவகார மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று (22) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.
அமைச்சர் மேற்கொண்ட அறிவிப்பு தொடர்பில் நாட்டில் மோதல் நிலையொன்று ஏற்படாதிருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தெளிவுபடுத்திக் கொள்வதற்காக இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
எம்மை கலந்துரையாடலுக்கு அழைத்தமையையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். எமது பௌத்த விவகார அமைச்சர் எம்முடன் கலந்துரையாட சந்தர்ப்பம் எடுத்துக் கொண்டமை வரவேற்கத்தக்கது. மிகவும் சிறந்த கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. நாம் எப்போதும் எமது பிரச்சினைகள் குறித்து கூறுவோம். அவற்றை செவிமடுப்பதற்கு யாரும் இல்லை. இப்பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என இன்று நடைபெற்ற கலந்துரையாடல் குறித்து நம்பிக்கை வைக்கின்றோம்.
இன்றைய கலந்துரையாடலின் போது, தேரர்கள் சிலரின் நடவடிக்கைகள் பற்றிக் கூறினார். அமைச்சரின் அக்கருத்துக்கு நாம் எதிர்ப்பைத் தெரிவித்தோம் எனவும் ஞானசார தேரர் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
எனினும் தேரர்கள் தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுக்களை கேட்டரிந்துகொண்ட நீதி அமைச்சர் தரப்பு தற்போது தோன்றியுள்ள நிலமை தொடர்பில் சுமுகமான இணக்கம் ஒன்றை பெற்றுக்கொள்ள சர்வமத ( போரம் ) குழு ஒன்றை நியமிப்பதாக யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உத்தேச சர்வமத போரம் ஊடாக தற்போது ஏற்பட்டுள்ள மத பிணக்குகளை கலந்தாலோசித்து தீர்த்துவைக்கும் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதாகவும் நீதி அமைச்சர் தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு அமைவாக விரைவில் பௌத்த , ஹிந்து, முஸ்லீம்,கிரிஸ்தவ மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மத குருக்கள் மற்றும் புத்திஜீவிகள் அடங்கிய போரம் ஒன்றை உறுவாக்குவதாக இருதரப்பும் உடன்பாட்டுக்கு வந்துள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவையில் கூட முஸ்லிம் அமைச்சர்கள் ரிஷாத் , ஹலீம் , கபீர் உள்ளிட்டவர்கள் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை கையாள்வதற்கான பொறிமுறை ஒன்றை அமைப்பதற்கான அவசியத்தை வழியுறுத்தியுள்ளனர்.
Post a Comment