மத்திய அரசுக்கு எதிராக திமுக இன்று மனிதசங்கிலி போராட்டம்

ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெற்ற விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்பட உள்ளது. 

திமுக மனிதசங்கிலி :
ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெற்றதாக அறிவித்து மக்களை பெரும் இன்னலுக்கு ஆளாக்கிய மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். அதன்படி, இன்று (நவம்பர் 24 ) மாலை 4 மணி முதல் 5 மணி வரை தமிழகம் முழுவதும் போராட்டம் நடக்கிறது. சென்னை அண்ணாசாலை பெரியார் சிலையில் இருந்து தேனாம்பேட்டை அன்பகம் வரை தி.மு.க.வினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதற்காக சாலையின் ஒரு பகுதியில் அவர்கள் மனித சங்கிலி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மனித சங்கிலி போராட்டத்தில் தி.மு.க.வின் பல்வேறு அணி நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்கிறார்கள்.

மாவட்ட அளவில் போராட்டம் :
தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் மனித சங்கிலி போராட்டத்தை தொடங்கிவைக்கிறார். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்கின்றனர். மாவட்ட அளவில் நடக்கும் மனித சங்கிலி போராட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.