இனவாத அமைப்புக்களின் துண்டுப் பிரசுர வெளியீடு: தெஹிவளை பெஷன் பக் தீக்கிரை

தெஹிவளை - பெப்பிலியான பிரதேசத்தில் உள்ள பெஷன் பக் ஆடைக்களஞ்சியத்தின் பிரமாண்ட காட்சியறை நேற்று நள்ளிரவு தீக்கிரையாகியது. பெஷன் பக் ஆடைக் களஞ்சியத்தின் முதன்மை அலுவலகம் மற்றும் பிரமாண்ட காட்சியறை என்பனவே தீக்கிரையாகியுள்ளன. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் தீவிபத்தின் காரணமாக பல கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் தீயில் எரியுண்டு நாசமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெஹிவளை கல்கிஸ்ஸை நகர சபையின் தீயணைப்பு வண்டிகளும் உரிய நேரத்தில் வரத் தவறியதன் காரணமாக தீ விபத்தின் சேதம் அதிகரித்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான இந்த வணிக நிறுவனம், கடந்த 2013ஆம் ஆண்டு தாக்கப்பட்டு எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பௌத்த சிங்கள இனவாத அமைப்புக்கள் நேற்று 19 ஆம் திகதி சனிக்கிழமை பகல் வேளையில் துண்டுப் பிரசுரமொன்றை வெளியிட்டிருந்தன.
அந்த துண்டுப் பிரசுரங்களில் பெஷன்பக், நோலிமிட், எடிசலாட் போன்றவற்றை பகிஷ்கரிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே நள்ளிரவில் பெஷன் பக் தீ பற்றி எரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.