பசில் ராஜபக்சவை காப்பாற்ற களத்தில் குதித்த ஞானசார

கடந்த ஆட்சியாளர்களால் ஸ்ரீபாத என்ற புனித பிரதேசம் சவுதி நாட்டிற்கு விற்பனை செய்யப்பட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தன.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் கண்டுபிடிக்க கூட முடியாத அளவுக்கு காணாமல் போயிருந்த, பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
ராஜபக்சர்களினால், சவுதி வர்த்தகர்களுக்கு விற்பனை செய்த ஸ்ரீபாத காணியில் முன்னெடுக்க திட்டமிட்ட ஹோட்டல் நிர்மாணிப்பு நடவடிக்கைகளை தடை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டிருந்தார்.
இவ்வாறான அதிரடி நடவடிக்கையின் பின்னர் ஒளிந்திருந்த ஞானசார தேரர், இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஞானசார தேரர்,
நாட்டில் இடம்பெறுகின்ற பாரிய காணி கொள்ளைக்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் பைஸர் முஸ்தப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புபட்டுள்ளனர்.
எனவே அவரை அமைச்சு பதவியில் இருந்து நீக்கி, கைது செய்து சட்டத்தை செயற்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றில் இதுவரையிலும் ராஜபக்சர்களுக்காக செயற்பட்டவர் மீண்டும் பசில் ராஜபக்ச தொடர்புப்பட்டுள்ள இந்த காணி கொள்ளை நடவடிக்கையில் அவரை காப்பற்றுவதற்காக இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.