க.பொ.த. சாதாரணதர மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைக்கான விசேட சேவை பத்தரமுல்லையி 26.11.2016

2016 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொடுப்பதற்காக விசேட ஒருநாள் சேவையொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆட்பதிவு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 8.30 முதல் மாலை 4.30 வரை பத்தரமுல்லையில் உள்ள ஆட்பதிவு திணைக்களத்தில் இந்த விசேட சேவை வழங்கப்படவுள்ளது.
அத்துடன் சாதாரண தர மாணவர்களின் தேசிய அடையாள அட்டைகள் தொடர்பான விபரங்களை ஆட்பதிவுத் திணைக்களத்தின் 011 2 862217 ,011 2 862217, மற்றும் 011 2 862228 , 011 2 862228, ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.