பேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் முன்னெடுக்கவுள்ள புதிய அதிரடி திட்டம்

உலகில் முன்னணி இணையத்தளங்களாக விளங்குவது கூகுள் மற்றும் பேஸ்புக் என்பனவே ஆகும்.
பயனாளர்களுக்கு பயனுள்ள தகவல்கள் மட்டுமன்றி சிறப்பு சலுகைகளையும் இவை இணைந்து வழங்கி வருகின்றன.
இதேவேளை பல இணையத்தளங்கள் இந் நிறுவனங்களின் விளம்பர சேவையினைப் பயன்படுத்தி சில போலியாக தகவல்களை விளம்பரப்படுத்தி வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
இந் நிலையில் குறித்த இணையத்தளங்களை முடக்குவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனம் என்பன தீர்மானித்துள்ளன.
அமெரிக்காவில் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது இவ்வாறான பல இணையத்தளங்கள் போலியான தகவல்களை வெளியிட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான இணையத்தளங்களை இனி தடைசெய்யவுள்ளதாக இரு நிறுவனங்களும் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளன.
இதனால் அடுத்துவரும் சில தினங்களில் போலியான செய்திகளை அல்லது தகவல்களை பரப்பிய இணையத்தளங்கள் தொடர்பான விபரங்களை இந் நிறுவனங்கள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.