கண்டியில் இனவாதத்தை கக்கிய பிக்குகளுக்கு கைது உத்தரவு இல்லையோ......

இனவாதத்தை தூண்டும் நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இனவாதத்தை தூண்டுவோர் எந்த இனத்தவர் என பாராமல் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பாதுகாப்புச் சபை கூட்டத்தின் போது பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு உத்தரவிட்டதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக வரையப்பட்டு வரும் அரசியலமைப்பில் புதிய சட்டங்கள் உருவாக்கப்படும் வரை இனங்களுக்கு இடையில் அமைதியை சீர்குலைக்கும் கருத்துக்களை வெளியிடும் நபர்களுக்கு எதிராக தற்போதுள்ள சட்டங்களுக்கு அமைய, குறைந்தது ஒரு வருடம் விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.


இந்த அவசர பாதுகாப்பு சபை கூட்டத்தை அடுத்து கண்டியில் ஞானசாரர் தலைமையில் ஒன்றிணைந்த இனவாத பிக்குகளின் பேரணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து பல்வேறு இனவாத கருத்துக்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர். (மேலுள்ள வீடியோவில் பார்க்கலாம்)  இனவாதத்தை தூண்டும் நபர்களை உடனடியாக கைது செய்து தற்போது நாட்டில் உள்ள ஒருவருட சிறை தண்டனை வழங்குவதாக ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு வழங்கிய உத்தரவை இவர்கள் விடயத்தில் பயன்படுத்தாதது ஏன்? என்ற கேள்வி பரவலாக இலங்கை வாழ் மக்களிடம் எழுந்துள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக அறியக் கிடைத்தது. 
பொருத்திருந்து பார்ப்போம்... சட்டம் சகலருக்கும் பாயுமா என்று........

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.