Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

இனவாதம் பேசுவோருக்கு ஒரு வருட சிறை - சுரேஷ் பிரியசாத், சுமனரத்தின தேரர் மற்றும் அப்துல் ராசிக் பற்றி ஆய்வு (Video)

Published on Saturday, November 19, 2016 | 5:50 PM

நாட்டில் இனவாதம் பேசும் அனைவருக்கும் எதிராக, இன மத பேதங்களை கருதாது நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு உத்தரவிட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
நேற்று இரவு எட்டு மணிமுதல் 10 மணி வரை நடைபெற்ற பாதுகாப்பு ஆணைக்குழு கூட்டத்தில் இனவாதத்தை தூண்டிவிடும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இதன்போது மட்டக்களப்பு மங்களாராம சுமனரத்தின தேரரின் கருத்துக்கள் மற்றும் தற்போது கொழும்பில் கைதுசெய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் செயலாளர் அப்துல் ராசிக், சிங்கள தீவிர நிலைப்பாட்டாளர் டொன் பிரியாத் என்ற சுரேஷ் பிரியசாத் ஆகியோரை தொடர்பில் விரிவான கருத்துகளை ஜனாதிபதி கேட்டறிந்தார். 

இரண்டு மணித்தியாலங்களாக நடைபெற்ற இந்த பாதுகாப்பு ஆணைக்குழு கூட்டத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர்களான விஜேதாச ராஜபக்ச, பாட்டலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதின், சாகல ரத்நாயக்க, டி.எம்.சுவாமிநாதன், ருவன் விஜயவர்த்தன நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தின தேரர், ஜனாதிபதி செயலாளர், பொலிஸ் மாஅதிபர், முப்படைகளின் தளபதிகள், சட்ட ஒழுங்கு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர். 
இதன்போது அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரது கருத்துகளை செவிமடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இனவாத கருத்துகளுக்கு எதிராக புதிய சட்டமூலத்தை உருவாக்குமாறு, நீதி அமைச்சருக்கு உத்தரவிட்டதாக மனோ கணேசன் குறிப்பிட்டார்.
இனவாத கருத்துக்களை தெரிவிப்போருக்கு எதிரான புதிய சட்டமூல வரைபு தயாரிக்கப்படுவதாகவும் அதுவரை தற்போது நடைமுறையிலுள்ள குற்றவியல் தண்டனை கோவை சட்ட மூலத்தின் அடிப்படையில் ஓராண்டுவரை சிறைத்தண்டனை வழங்க முடியும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச இதன்போது தெரிவித்துள்ளார். 
எவ்வாறாயினும் புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் வரை காலம் தாழ்த்தாது உடனடியாக செயற்படுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த பொலிஸ் மாதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
முகநூல் கணக்குகள் மூலமும் இணையத்தளங்கள் மூலமும் இனவாத கருத்துகளை செய்திகளாகவோ, கருத்து பதிவுகளாகவோ பதிவுசெய்பவர்களை கண்காணித்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தொழிட்நுட்ப பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறும் ஜனாதிபதி தனது செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved