சர்ச்சைக்குரிய டேசி பாட்டி யார்? நிறைய சொத்துக்கள் வந்தது எப்படி? ஷிரந்தி விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரின் சொத்து மோசடியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டவர்களில் டேசி பாட்டியும் ஒருவராவார்.
இந்நிலையில் அவர் யார் என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச அவர் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
அண்மையில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் டேசி பாட்டி குறித்து குறிப்பிட்டுள்ளார்.
“டேசி பாட்டி என்பவர் என சித்தி ஒருவராகும். அவர் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. அவருக்கு நிறைய சொத்துக்கள் உள்ளன.
கடந்த காலங்களில் வர்த்தகர் ஒருவர் இரத்தின கற்கள் அடங்கிய பொதி ஒன்றை பாட்டியிடம் கையளித்தார். அவருடன் குறித்த வர்த்தகருக்கு காணப்பட்ட தனிப்பட்ட உறவு காரணமாகவே டேசி பாட்டியிடம் அதனை வழங்கியிருந்தார்.
இன்னும் ஒரு வர்த்தகர் பணப்பை ஒன்றை டேசி பாட்டியிடம் வழங்கியிருந்தார். அவை வர்த்தக நடவடிக்கைகளுக்காக அல்ல. அவர் அவரது சொத்துக்களை எனது மூன்று பிள்ளைகளுக்கும் வழங்க தீர்மானித்திருந்தார்.
அவருக்கு எனது பிள்ளை குறித்து அக்கறை உள்ளன. அதில் என்ன தவறு? அவரிடம் நிறைய சொத்து இருந்தமையால் என் பிள்ளைகளுக்கு கொடுத்தார்.
தற்போது அவருக்கு இந்த பிரச்சினைகளின் காரணமாக சரியான நினைவுகளும் இல்லாமல் போய்விட்டது. இவ்வாறு செய்வதெல்லாம் பாவம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான விடயங்களை ஊடகங்களுக்கு அறிவிப்பதன் ஊடாக மக்களை மீண்டும் முட்டாளாக்கும் நடவடிக்கையில் ராஜபக்ஷ குடும்பம் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.