Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

சில ஸ்மார்ட் போன்களில் டிசம்பர் மாத இறுதிக்கு பிறகு வாட்ஸ் அப் சேவை கிடையாது

Published on Thursday, November 3, 2016 | 11:37 PM

சென்னை
குறிப்பிட்ட சில இயங்கு செயலிகளை பயன்படுத்தும் ஆண்டிராய்டு போன்கள் மற்றும் சில ஸ்மார்ட் போன்களில் டிசம்பர் மாத இறுதிக்கு பிறகு வாட்ஸ் அப் சேவை கிடையாது என்று அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சிம்பியான் இயங்கு செயலிகளை (ஆபரேட்டிங் சிஸ்டம்) கொண்ட குறிப்பிட்ட மொபைல் போன்கள், சில வகை ஸ்மார்ட் போன்கள் ஆகியவற்றிற்கு டிசம்பர் மாத இறுதிக்குப் பிறகு வாட்ஸ் அப் சேவை கிடைக்காது.
இந்த வகை போன்களும் எங்களுக்கு முக்கியம் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனாலும் எதிர்கால சேவை மாற்றங்களுக்கு ஏற்ற தொழில் நுட்ப வசதிகள் இந்த வகை போன்களில் இல்லை. எனவேதான் இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டி உள்ளது.
எனவே, தங்கள் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் இனி வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் வேறு போனை மாற்றிவிடுங்கள். அப்போதுதான் இந்த வாட்ஸ் அப் சேவையை தொடர்ந்து பெற முடியும்”இவ்வாறு வாட்ஸ் அப் நிறுவன இணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்அப் சேவை துண்டிக்கபட வாய்ப்பு உள்ள சில குறிப்பிட்ட அலைசி மாடல்களின் பட்டியல் பின்வருமாறு:
சிம்பியான் ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட போன்கள்; பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10; நோக்கியா எஸ் 40; நோக்கியா எஸ் 60; ஆன்டிராய்ட் வெர்சன் 2.1 மற்றும் 2.2; வின்டோஸ் போன் 7.1; ஆப்பிள் ஐபோன் 3 ஜிஎஸ்; ஐஓஎஸ் 6
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved