அமெரிக்காவின் பெருமையை உயர்த்துவோம்: இறுதி கட்ட பிரசாரத்தில் ஹிலாரி உறுதி


அமெரிக்க தேர்தல் இன்று (08) நடைபெறவுள்ளது. இதன் இறுதி கட்ட பிரசாரத்தில் பிலடெல்பியாவில் நடந்த கூட்டத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் பங்கேற்று பேசினார். இந்த கூட்டத்தில் அதிபர் ஒபாமா அவரது மனைவி மிக்செல் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் ஹிலாரி பேசுகையில்: இந்த தேர்தல் பிரிவினைக்கும், ஒற்றுமைக்கும் இடையே நடக்கும் போராட்டம் இந்த தேர்தல். நடுத்தர மக்களின் வாழ்க்கை தரம் உயர ஜனநாயக கட்சி உழைத்து வருகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா இந்த நாட்டிற்கு நல்ல முறையில் உழைத்துள்ளார். அவரது அமைச்சரவையில் பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன். நமது எண்ணங்கள், நம்பிக்கை தொடர்பான தேர்தல் ஆகும். டிரம்ப் , பல நாடுகள் கீழ் நோக்கி சென்ற போது நாம் மேல் நோக்கி உயர்ந்துள்ளோம். மேலும் உயர , வலிமை பெற பாடுபடுவோம். இந்த நாட்டின் பெருமையை மூழ்கடிக்க மாட்டோம். உயர்த்தி காட்டுவோம். 
நமது நாட்டின் அனைத்து உரிமைகளுக்கும் தான் நாங்கள் முக்கியம் அளிக்கிறோம். டிரம்ப் நாட்டு மக்களின் மகள்களுக்கு இழிவை ஏற்படுத்துபவர். நமது நாட்டின் பெருமையை அவமதித்து விட்டார். எந்த மாதிரியான ஆட்சியாளர்கள் வேண்டும் என மக்கள் முடிவு செய்ய வேண்டும். அனைத்து தரப்பினரும், எங்களுக்கு ஓட்டளிக்க வேண்டும். நீங்கள் அனைவரும் மாற்றத்திற்கான ஓட்டை பெற்றுள்ளீர்கள். இவ்வாறு அவர் பேசினார். 


டிரம்பை நம்ப முடியாது: ஒபாமா : அதிபர் ஒபாமா பேசுகையில்: குடியரசு கட்சியினர் கூட டிரம்ப்புக்கு எதிரானவர்களாக இருக்கின்றனர். அவர் அதிபருக்கு தகுதியற்றவர். அணு கொள்கையில் அவரை நம்ப முடியாது. எங்களால் முடிந்தது. அனைத்தும் செய்தோம். ஹிலாரி உலக அளவில் புகழ் பெற்றவர். குடியரசு நாடுகள் ஹிலாரியை பாராட்டுகின்றன. ஹிலாரி வெறும் டுவிட் செய்து விட்ட போகிறவர் அல்ல. மக்கள் கவனமாக வாக்களிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.