முஸ்லிம்களையும் பள்ளிவாசல்களையும் அகற்றவும் - அசின் விராது

அபூஸாலி முஹம்மத் சுல்பிக்கார் 
அமெரிக்க  ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்பிற்கு உலக நாடுகளில் இருந்து வாழ்த்து செய்தி வந்த வண்ணம் இருக்கையில் மியான்மர் நாட்டில் புத்த அடிப்படைவாத அமைப்பான மா  பா தா எனும் அமைப்பின் தலைவர் விரது தனது வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் “டிரம்ப் என்னை போன்றவர்.எங்கள் நாட்டில் ஏற்படும் முஸ்லிம்களின் அதிகரிப்பால் நாங்கள் என்ன கஷ்டங்களை சந்தித்தோமோ அதையே அமெரிக்க சந்தித்தது.

தற்போது தேர்வான ஜனாதிபதி  டொனால்ட் அந்நாட்டில் குடியேறிய முஸ்லிம்களை வெளியேற்றுவதாகவும் அதிகரித்து வரும் பள்ளிவாசல்களையும் அகற்றுவதாக தெரிவித்துள்ளார்.இதை நாங்கள் வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அமெரிக்காவில் உள்ள தேசியவாத அமைப்புகளில் ஒத்துழைப்பு அவருக்கு அதிகம் உள்ளதாகவும், பெருகி வரும் தீவிரவாதத்தை ஒடுக்குவார் என்றும் தெரிவித்தார்.

மியான்மரில் முஸ்லிம்கள் மீதான ஏற்பட்ட பல கலவரங்களுக்கு விரது மற்றும் அவருடைய வெறுப்பு பிரச்சாரமே முக்கிய காரணமாக அமைந்திருந்தது.

அதேபோல் தெற்காசியாவின் புத்த மதம் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளில் இவரின் விஷமா பேச்சுகளும் அமைப்பின் செயல்பாடுகளும் பல்லாயிரகணக்கான முஸ்லிம்களின் உயிர்களையும் உடமைகளையும் பறித்தது.
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.