நாட்டில் வன்முறைகள் வெடித்தால் நாம் பொறுப்புக் கூற மாட்டோம் – ஞானாசார தேரர் (இனவாத பேரணியின் தீர்மாணங்கள் - Full Video)

சிங்கள பௌத்தர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணாவிட்டால் நாட்டில் மோசமான வன்முறைகள் வெடிக்கும் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானாசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“பௌத்த மதத்தை பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் இன்று கண்டியில் ஒன்று கூடிய கடும்போக்கு அமைப்புக்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில்,  அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்:
சிங்கள பௌத்த மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்துவரும் பௌத்த பிக்குகளை ஒடுக்க அரசாங்கம் சதித்திட்டமொன்றை முன்னெடுத்து வருவதாகவும், சிங்கள பௌத்த மக்களின் மதத் தலைவர்களான மகா நாயக்கத் தேரர்கள் இணைந்து கூட்டாக சங்க ஆணையை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சில அமைச்சர்கள் இந்த நாட்டின் காவல்தெய்வங்களாக கருதப்படும் பௌத்த பிக்குகளை ஏளனப்படுத்தும் செயல்களிலும் பகிரங்கமாக ஈடுபட்டுள்ளனர். அது மாத்திரமன்றி நாட்டில் இன்று முஸ்லிம் கடும்போக்குவாதம் முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. ஆனால் எமது ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
மகாநாயக்க தேரர்கள் காலணித்துவ ஆட்சிக்காலத்தில் வெள்ளைக்காரரன் வழங்கிய சொத்துக்களை அனுபவித்துக்கொண்டு அவன் கூறிய கடமைகளை மாத்திரம் செய்துகொண்டிருக்காது சிங்கள பௌத்த இனம் எதிர்நோக்கியுள்ள இந்த நெருக்கடிகள் குறித்தும் தமது கவனத்தை செலுத்த வேண்டும்.
இந்த கடப்பாட்டை அவர்கள் செய்யத் தவறினால் சிங்கள பௌத்த இனத்தை பாதுகாப்பதற்காக பல்வேறு மட்டங்களில் போராடிவரும் எமது இளைய தலைமுறையினர் உட்பட பௌத்த ஆதரவாளர்கள், எவ்வாறான போராட்டத்தை தெரிவுசெய்தாலும் அவற்றுக்கு நாம் பொறுப்பு கூற மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.