அமெரிக்க தேர்தல்: கூகுலில் அதிகம் தேடிய நாடுகளில் இலங்கையும் ஒன்று

அமெரிக்க ஜனாதிபதி  தேர்தல் குறித்து இணையத்தில் தேடுதவதில் இலங்கையர்கள் அதிகம் ஆர்வம் காட்டியதாக பதிவாகியுள்ளது.
கூகுல் தேடலில் கடந்த ஒரு வாரத்துக்குள், அமெரிக்க தேர்தல் தொடர்பில்  24 வீதமான ஆய்வுகளை இலங்கையர்கள் மேற்கொண்டுள்ளனர்.  இது தெற்காசியாவில் உள்ள நாடுகளில் அதிக ஆர்வம் காட்டிய நாடாக இலங்கையை சுட்டிக்காட்டுகின்றது.
இந்தியாவில் 18 வீதமானோர் இதில் ஆர்வம் காட்டியுள்ளனர். பாகிஸ்தானில் 10 வீதமானோர் கூகுலைப் பயன்படுத்தி அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தகவல் பெற்றுள்ளனர்.
ஆசிய பிராந்தியத்தில் தாய்வான் மாத்திரம், 33 வீதமான ஆர்வத்தை காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தேர்தல் தொடர்பில் அதிகமாக, மக்கள் ஆர்வத்தை ஈர்த்திருந்த நாடாக கனடா காணப்பட்டுள்ளதாகவும் கூகுல் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவித்துள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.