Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

SLTJ செயலாளர் அப்துல் ராசிக்கிற்கு பொலிஸ் அழைப்பாணை - கைது செய்யாவிட்டால் மரணம் என்கிறார் ஞானசாரர்

Published on Wednesday, November 16, 2016 | 12:16 AM

தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் அப்துல் ராசிக்கை பொலிஸில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டள்ளது.
ஞானசார தேரர் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் புத்த சாசனத்தை அவமானப்படுத்திவிட்டதாக அவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

நாளைய தினம் அவர் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ளவே அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் நாளை அவர் மீது பொலிஸார் வழக்கு தொடரலாம் என தெரிகிறது.

அதேவேளை அப்துல் ராசிக்கை கைது செய்யாவிட்டால் 200 பேருடன் மரணிக்கத் தயாரென எச்சரித்துள்ள ஞானசார தலைமையிலான பௌத்த பிக்குகள் தாம் எல்லாவற்றுக்கும் முடிவு கட்டுவோம் என எச்சரித்துள்ளனர்.

கொழும்பில் அண்மையில் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது இனவாத கருத்துக்களை பரப்பிய சிங்கள இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அப்துல் ராசிக்கை கைது செய்யுமாறு தற்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved