பேரினவாதம் யாரை திருப்திப்படுத்த முனைகிறது..??

அண்மைக்காலமாக இனவாத ரீதியான கருத்துக்களை கூறிவந்த டான் பிரசாத் கைது செய்யப்படும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் அடுத்து sltj இன் முக்கிய பிரமுகர்கள் யாராவது கைது செய்யப்படுவர் என்ற ஊகத்தை மெய்ப்பிக்கும் விதமாக அமைந்த நிகழ்வே அதன் செயலாளரது கைது. 
டான் பிரசாத் கைது செய்யப்பட்டவுடன் அதை சாதகமாக பயண்படுத்தி இன ரீதியான முறுகல்களை உருவாக்கி அதில் குளிர்காய முனையும் கடும்போக்குவாதிகளின் சதிமுயற்சிகளை முறியடிக்கும் முன்னெச்சரிக்கை நடவெடிக்கையாகவும் அரசிற்கு ஏற்படப்போகும் அழுத்தங்களை தவிர்க்கும் முகமாகவும் இது அமையப்பெறினும் இதன் மூலம் பேரின சமூகத்தை திருப்திப்படுத்த நினைக்கும் அரசு சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான குரல் வலைகளை நசுக்குகின்றதா என்ற ஐயங்களும் எழாமலில்லை. 
அண்மையில் sltj ஆல் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட முன்னகர்வுகளின் போது பயண்படுத்தப்பட்ட சமயோசிதமற்ற வார்த்தைப் பிரயோகங்களானது பேரின சமூகத்தின் மத்தியிலும் அவர்கள் சார் சமூகத்திலும் பாரியளவான அதிர்வலைகளை விட்டுச்சென்றுள்ளதை மறுதலிக்கமுடியாது. 
இருந்தும் இதைவிடப்பாரதூரமான நச்சுக்கருத்துக்களை தாம் சார்ந்த சமூகத்தின் பிரதிபழிப்பாக விதைத்து வரும் பெருச்சாழிகள் சுதந்திரமாக நடமாடித்திரியும் போது அப்துல் றாசிக்கின் கைதானது நல்லாட்சி அரசின் மீதான நம்பகத்தன்மையினை கேள்விக்குள்ளாக்கி நிற்கன்றது. உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சமயோசிதமற்ற ரீதியில் கடுந்தொனியில் பேசும் அவர் சொற் பிரயோகங்களையே சமூகம் வெறுக்கின்றதே ஒழிய அவரையல்ல. 
Muja Ashraff - 

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.