அரசாங்கம் சூழ்ச்சி செய்தே பட்ஜெட்டை வென்றது - கூட்டு எதிர்க் கட்சி குற்றச்சாட்டு

வரவு செலவுத் திட்டத்தை சூழ்ச்சி செய்தே அரசாங்கம் வெற்றி கொண்டதாக கூட்டு எதிர்க் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
பாராளுமன்றத்திலுள்ள அரசாங்கம் சார்பு உறுப்பினர்களுக்கு சலுகைகளையும், வரப்பிரசாதங்களையும் செய்து கொடுத்தே வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்குகளை பெற்றுக் கொண்டதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.
கூட்டு எதிர்க் கட்சியின் வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு எதிரான அம்சங்களே அதிகம் உள்ளன. இது அரசாங்கத்தின் இறுதி வரவு செலவுத் திட்டமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்ஷா குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான விவாத்தின் போது பாரிய எதிர்ப்பை வெளியிடவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். 

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.