Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

இனவாதத்தால் எதனையும் வெல்ல முடியாது : இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக தயாராகவே இருக்கின்றோம்

Published on Thursday, November 24, 2016 | 6:34 AM

கிண்ணியா ஐெம்ஸித் அஸீஸ்

“இனவாதத்தால் எதனையும் வெல்ல முடியாது. கலந்துரையாடல்கள் மூலமே பிரச்சினைகளுக்கான தீர்வைக் காண முடியும். இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக எந்தத் தரப்பினருடனும் பேசுவதற்கு தயாராகவே இருக்கின்றோம்.”
இப்படி நிதானமான, யதார்த்தபூர்வமான ஒரு கருத்தை வெளியிட்டவர் வேறு யாருமல்ல. முழு நாடும் அறிந்த ஒரு மதகுரு. பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் அவர்கள்தான்.


நேற்று பாராளுமன்ற குழுக்களின் அறையில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அவர்களை சந்தித்து ஒரு மணி நேரம் கலந்துரையாடிவிட்டே அவர் இப்படிச் சொல்லியிருக்கிறார்.

வரவேற்கத்தக்க கருத்து தேரர் அவர்களே!
அப்படித்தான் இஸ்லாம் வழிகாட்டுகிறது.

இஸ்லாமிய அறிஞர்களும் அதனைத்தான் வலியுறுத்துகிறார்கள்.
நல்லதொரு மனோநிலையோடுதான் நீங்கள் அந்தக் கருத்தை தெரிவித்திருப்பீர்கள் என நம்புகின்றோம்.

வாருங்கள். கலந்துரையாடலாம்.

திறந்த மனதோடு வாருங்கள். மனம் திறந்து பேசலாம்.

இலங்கை முஸ்லிம்களால் உங்களுக்கு என்ன இடையூறு என்று எங்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.

நியாயமானதை நிச்சயமாக ஏற்றுக் கொள்வோம். தவறான புரிதலென்றால் பக்குவமாய் தெளிவு தருவோம்.

இதனை விட வேறு அழகிய வழிமுறை என்ன இருக்கிறது?
நீங்கள் சில முஸ்லிம்களின் செயற்பாடுகளை வைத்து இஸ்லாத்தை அளவிட வேண்டாம்.

தவறிழைப்பவர்கள், பஞ்சமா பாதகங்களில் ஈடுபடுபவர்கள், அநாகரிகமானவர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள். அதற்காக மதத்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது எந்த வகையில் நியாயம்? என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

தீவிரவாத சிந்தனைப் போக்குடையவர்களுக்கு ஒரு கொள்கை கிடையாது. அவர்கள் எல்லோருக்கும் தெரிந்த கொள்கை ஒன்றே ஒன்றுதான். அதுதான் வன்முறை.

இஸ்லாம் வன்முறைக்கு எதிரான மார்க்கம்.

குர்ஆனும் நபிவழியும் அதனைத்தான் சொல்லித் தருகின்றன.
அதனை திறந்த மனதோடு படித்துப் பாருங்கள். உண்மையைப் புரிந்து கொள்ளலாம்.

உமரும் (ரழியல்லாஹு அன்ஹு) எதுவும் தெரியாமல்தான் முஹம்மத் நபியவர்களின் தலையைக் கொய்து வர வாளோடு வந்தார்கள்.
வந்த பின்னர்தான் விடயம் புரிந்தது. அல்குர்ஆன் விளக்கம் தந்தது. மனம் திறந்தார்கள். தவறான புரிதலை மாற்றிக் கொண்டார்கள்.

ஜிஹாத் என்ற சொல்லைக் கேட்டு அஞ்ச வேண்டியதில்லை. அதன் அர்த்தம் விரிந்தது. அஞ்சுவதற்கு அதில் என்ன இருக்கிறது என்பதை தேடிப் படித்தால்தானே அது பற்றி அறிந்து கொள்ள முடியும்.

ஜிஹாத் என்றாலே இரத்தம் தோய்ந்த வாளும் துப்பாக்கியும் கொலை வெறியாட்டமுமே மனக் கண்முன் தோன்றுமளவுக்கு நயவஞ்சக உலகு அதனை அவ்வாறு கட்டமைத்து வைத்திருக்கிறது.

அப்படி பல அம்சங்களை பூதாகரப்படுத்தி பூதமாக காண்பித்ததன் நோக்கம் உலக அமைதிக்கு சமாதி கட்டுவதுதான்.

மனித வாழ்க்கை மிகவும் குறுகியது. மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டுப் போவோம்.  மறைந்தாலும் இந்த மண் எம்மைத் தூற்றக் கூடாது. போற்றும்படி வாழ்வோம். ஐக்கியமாய் வாழ்வோம். நற்பணிகளில் உடன்படுவோம். வேறு பிரிக்க வேண்டிய விடயத்தில் நாகரிகமாக நடந்து கொள்வோம்.

உலக மாந்தர் அனைவருக்கும் நிரந்தர வெற்றி கிடைக்க வேண்டும் என்பது எம் தலைவர் முஹம்மத் நபிகளாரின் பேரவா. அந்த வழிகாட்டலைப் பின்பற்றுவதனால் உலகம் அமைதி பெறும் என்றே நாம் ஆழமாக நம்புகிறோம்.

எனவே, கௌரவ மதகுரு அவர்களே! உங்கள் நியாயமான கருத்தை இதயம் திறந்து வரவேற்கிறோம். வாழ்த்துகிறோம்.
எனவே, கௌரவ மதகுரு அவர்களே! உங்கள் நியாயமான கருத்தை இதயம் திறந்து வரவேற்கிறோம். வாழ்த்துகிறோம்.

பேசுவதற்கு எங்கள் இல்லக் கதவுகளும் உள்ளக் கதவுகளும் திறந்தே கிடக்கின்றன. இதயம் திறந்து வாருங்கள். நல்லதோர் உதயம் மலரும் நம் நாட்டில்.

நண்பர்களுக்கு பகிரவும் :

0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved