முஸ்லிம்களை கொல்லுவோம் என்று மிரட்டியவர் மற்றும் ஞானசாரர் மீது SLTJ முறைப்பாடு

முஸ்லிம்களை நெருப்பு வைத்துக் கொல்லுவோம் என்று மிரட்டியவர் மற்றும் அல்லாஹ்வை கேவலமாக பேசிய ஞானசார தேரர் ஆகியோர் மீது பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்தது தவ்ஹீத் ஜமாத் – SLTJ

ஆர்பாட்டம் செய்வதற்க்காக முஸ்லிம்கள் வந்தால் அவர்களை நெருப்பு வைத்துக் கொள்ளுவோம், அவர்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்தவர் மீதும் அல்லாஹ்வை கேவலமாக பேசிய ஞானசார தேரர் மீதும் தவ்ஹீத் ஜமாத் சார்பில் நேற்றைய தினம் (07.11.2016) கொழும்பு, கோட்டை பொலிஸ்நிலையத்தில் இரண்டு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
GSP+ வரிச் சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் அரசாங்கத்தை கண்டித்து தவ்ஹீத் ஜமாத் நடத்திய ஆர்ப்பாட்டம் கடந்த 03.11.2016 அன்று கொழும்பில் நடைபெற்றது.
குறித்த ஆர்பாட்டத்தை தடை செய்யுமாறு கோரி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் அல்லாஹ்வுக்கு இரண்டா? மூன்றா? என்றும் இவர்கள் எங்கிருந்து பிறந்தவர்களோ தெரியாது. என்றும் அல்லாஹ்வை கேவலப்படுத்தும் விதமாக பேசியிருந்தார்.
இதே நேரம் கொழும்பு, புறக்கோட்டை, ரயில் நிலையம் முன்பு தவ்ஹீத் ஜமாத் ஆர்பாட்டம் நடத்தினால் அடித்து விரட்டுவோம் என்றும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.
ஞானசார தேரரின் இந்த இனவாத பேச்சினால் தூண்டப்பட்ட சுமார் 10 க்கு உட்பட்ட பெரும்பான்மை இன இளைஞர்கள் தவ்ஹீத் ஜமாத் ஆர்பாட்டம் நடத்திய குறித்த 03.11.2016ம் அன்று புறக்கோட்டை இரயில் நிலையத்திற்கு முன்பு திரண்டு முஸ்லிம்களுக்கு எதிரான தமது இனவாத கருத்துக்களை வெளியிட்டார்கள். அதனை அவர்களே வீடியோ பதிவும் செய்து பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களிலும் பரப்பியிருந்தார்கள்.
அல்லாஹ்வை கேவலப் படுத்தும் விதமாக கருத்து வெளியிட்ட ஞானசார தேரருக்கும், அவருடைய தூண்டுதலினால் “ஆர்பாட்டம் செய்வதற்க்காக முஸ்லிம்கள் வந்தால் அவர்களை நெருப்பு வைத்துக் கொல்லுவோம், அவர்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்துவோம், தேவையான ஆயுதங்களையும் கொண்டு வந்திருக்கிறோம்” என்று பேசியவர் மீதும் தனித் தனியான இரண்டு முறைப்படுகள் செய்யப்பட்டுள்ளன.
ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் குறித்த முறைப்பாடு நேற்றைய தினம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-ஊடகப் பிரிவு
தவ்ஹீத் ஜமாத் – SLTJ,
கொழும்பு

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.