ஞானசாரதேரர் இனவாதத்தை கக்கினாலும் கைது செய்ய வேண்டும்


சி.வி.விக்­னேஸ்­வ­ர­னாக இருப்­பினும் ஞான­சா­ரதே­ர­ராக இருப்­பினும் இன­வா­தத்தை தூண்­டு­ப­வர்­களை கைது செய்ய வேண்டும். இன­வா­தத்­திற்கு எதி­ரான சட்­டத்தை கொண்டு வர­வேண்டும். மஹிந்த ராஜ­ப­க் ஷவை வீட்­டுக்கு அனுப்­பி­யதும் இன­வா­த­மே­யாகும் என இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தின் மதிப்பை குறைக்கும் வகையில் ஆளும் எதி­ர­ணி­யினர் மாறி மாறி ஒரு­வரை ஒருவர் திருடர் என சேறு பூசு­வது நல்­ல­தல்ல. மக்கள் பிர­தி­நிதி என்­ப­தனை மறந்து செயற்­ப­டக்­கூ­டாது. திருட்டு செய்­தி­ருந்தால் அதனை நீதி­மன்றம் பார்த்துக் கொள்ளும். அனைத்­திலும் எதிர்ப்­பினை வெளி­யி­டாமல் எதி­ர­ணி­யினர் பொறுப்­பு­மிக்­க­வர்­க­ளாக செயற்­ப­ட­வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற 2017 ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவா­தத்தின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில், பாரா­ளு­மன்­றத்­திற்குள் அமர்ந்து கொண்டு ஒரு­வ­ரை­யொ­ருவர் மாறி மாறி திரு­டர்கள் என்று திட்­டு­வது நல்­ல­தல்ல. நாம் அனை­வரும் மக்கள் பிர­தி­நிதிகள் என்­ப­தனை மறந்து செயற்­ப­டு­கின்றோம். இந்த முறையை மாற்ற வேண்டும். திரு­டர்கள் இருந்தால் அவர்­களை நீதி­மன்றம் பொறுப்­பேற்கும். அவர்­களை நீதி­மன்­றத்­திடம் ஒப்­ப­டைத்து விடுவோம்.

இல்­லை­யென்றால் நாட்டு மக்கள் எம்மை திரு­டர்கள் என்று கூறும் நிலைமை ஏற்­படும். ஆளும் கட்­சி­யினர், எதி­ர­ணி­யினர் நாம் அனை­வரும் திருடர் என கூறி பாரா­ளு­மன்ற மதிப்பை இழக்க செய்­ய­கூ­டாது.

வரவு – செல­வுத்­திட்­டத்தில் பிழைகள் இருக்­கலாம். ஆனாலும் அதனை விவாதம் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும். எதி­ர­ணி­யினர் பட்ஜெட் பிழையை மாத்­திரம் பார்க்­காமல் நல்­ல­வை­க­ளுக்கு ஆத­ரவு வழங்க வேண்டும் தேசிய அர­சாங்கம் நிறுவ வேண்டும் என்­ப­த­னையே மஹிந்த ராஜபக் ஷ விரும்பினார்.

இந்நிலையில் தற்போது பொது பலசேனா வின் இனவாதம் மீளவும் தோன்றியுள்ளது. மஹிந்த ராஜபக் ஷவை வீடுக்கு அனுப் பியது பொது பல சேனாவாகும்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.