பட்டதாரி ஆசிரியர்களின் போட்டிப்பரீட்சை சர்ச்சைக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை தீர்வு....!! மாகாண சபை உறுப்பினர் அன்வர் தெரிவிப்பு

எம்.ரீ. ஹைதர் அலி
கடந்த 2016.10.22ஆந்திகதி கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிப்பதற்கான போட்டிப்பரீட்சை கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்டதோடு, குறித்த பரீட்சையின் முறைகேடு தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் குழுத்தலைவருமான கௌரவ. ஆர்.எம் . அன்வரினால் 2016.10.27ஆந்திகதி நடைபெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வின்போது நடாத்தப்பட்ட  போட்டிப்பரீட்சையை இரத்துச் செய்து மீண்டும் சுற்று நிருபத்தில் குறிப்பிட்டுள்ளவாறு நடாத்துமாறு அவசர பிரேரணை ஒன்றை முன் வைத்திருந்தார்.

இப்பிரேரணையை கருத்திற்கொண்டு அவற்றை விசாரிப்பதற்காக விசேட குழுவொன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் கெளரவ. நசீர் அஹமட் அவர்களினால் நியமிக்கப்பட்டது.

எனவே, இதுதொடர்பாக எதிர்வரும் (2016.11.11 வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள மாகாண சபையின் விசேட அமர்வின்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் மாகாண கல்வி அமைச்சர் கெளரவ. தண்டாயுதபாணி உள்ளடங்களான குழுவினரால் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் குழுத்தலைவருமான கௌரவ. ஆர்.எம். அன்வர் தெரிவித்தார்

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.