அப்துல் ராசிக்கை காட்டிக்கொடுத்த முஸ்லிம் அரசியல் வாதிகள்!

டான் பிரசாத்தை கைது செய்வதற்கு நாங்கள்தான் காரணம் என்று சில வங்குறோத்து அரசியல் வாதிகள் உரிமை கோருவதை கண்டு வியப்பாக உள்ளது.


இதற்கு முன் ஞானசார பகிரங்கமாகவே முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வளவோ விடயங்களை பேசியுள்ளான்.
அப்போதல்லாம் நடவடிக்கை எடுக்கமுடியாமல் ஓடி ஒழிந்து கொண்ட இந்த அரசியல் வாதிகள், டான் பிரசாத் கைது செய்யப்பட்டவுடன் நான் முந்தி, நீ முந்தி என்று அறிக்கை விட முண்டியடிப்பது  நகைச்சுயைாக உள்ளது.

அந்த அரசியல் வாதிகளுக்கு முடியுமா?
ஞானசாராவை கைது செய்ய வைப்பதற்கு. உங்களால் முடியாது என்பது எல்லோருக்கும் தெறிந்தவிடயம்தான்.

டான் பிரசாத்தை கைது செய்வதாக இருந்தால். அதற்கு ஈடாக ஒரு முஸ்லிமையும், நாங்கள் கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என்று பொலிசார் யோசித்தபோது.

அப்படி என்றால் இன்னாரை கைது செய்யுங்கள்,  நாங்கள் ஒன்றும் கூறமாட்டோம் என்று இந்த கூத்தாடி அரசியல் வாதிகள்தான் காட்டிக் கொடுத்திருப்பார்கள்.

ஏனென்றால், ஒரு கல்லில் இரண்டு மாங்காய் பறிக்கும் தந்திரம் தெறிந்த நமது அரசியல் வாதிகள்.
ஒன்று.... டான் பிரசாத்தை இந்த நல்லரசாங்கம் கைது செய்து விட்டது பார்த்தீர்களா? என்று நல்லரசாங்கத்தை காப்பாத்துவது.
இரண்டு... நாங்கள் தான் இதற்கு காரணம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்வது..

ஒன்றை மட்டும் இந்த அரசியல் வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்..
(
முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பதை) போன்று நீங்கள் மாபெரிய உண்மையொன்றை மறைக்க நாடகமாடுகின்றீர்கள்.

உண்மை என்னவென்றால், அப்துல் ராசிக் என்ற நபர் கைது செய்யப்பட முடியாது என்ற நிலையிருந்திருந்தால்..,

நிச்சயமாக டான் பிரசாத் கைது செய்யப்பட்டிருக்க மாட்டான்.
இதுதான் உண்மை....

தம்பட்டம் அடிக்கும் அரசியல் வாதிகளே! உங்கள் நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள்.
அப்துல் ராசிக்கை கைது செய்யாமல் உங்களால், டான் பிரசாத்தை கைது செய்ய முடியுமா?
முடியவே முடியாது உங்களால்.

பாவம், ஒரு இனவாதியை தண்டிப்பதற்கு.
ஒரு அப்பாவி பழியாக்கப்பட்டுள்ளான்.
என்பதே உண்மையாகும்.

அப்படி என்றால்., அரசியல் வாதிகளே!
ஞான சார இனவாதியை கைது செய்ய  இன்னும் எத்தனை அப்துல் ராசிக் உங்களுக்கு தேவைபடுகின்று என்று கூறினால், அதற்காக முன்வருவதற்கு ஆயிரம் அப்துல் ராசீக்குகள் முன்வருவார்கள் என்பதை உங்கள் ஏஜண்டிடம் கூறுங்கள்.

எங்களுக்கு தேவை சமூகம் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பது...

உங்களுக்கு தேவை சமூகத்தின் மேல் ஏறி நின்று கொண்டு பாராளமன்றம் செல்ல வேண்டும் என்பதே....
ஆனால்,  உங்களுக்கு வெற்றி இவ் உலகில்...

அப்துல் ராசிக்கைப் போன்றவர்களுக்கு மறு உலகில்தான் வெற்றி....

புரிந்து நடந்து கொள்ளுங்கள் அல்லாஹ் உங்களுக்கு அருள்பாளிப்பானாக....

எம்.எச்.எம்.இப்ராஹிம்
கல்முனை.....

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.