இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது கடினம் - ஜனாதிபதி

நாட்டில் வாழும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்திஅதன் ஊடாக நாட்டை அபிவிருத்தி செய்யும் கடும் சவால் மிக்க செயற்திட்டமொன்றை தாம் முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இது கடினமாக இருந்தாலும்அதனை நிறைவேற்றியே தீருவேன் என்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

களுத்துறை மாவட்டத்தின் ஹொரண கல்வி வலயத்திற்கு உட்பட்ட மதுராவல மகா வித்தியாலயத்தின் புதிய கேட்போர் கூடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதீதியாக கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இலகுவான சவால்களுக்கு அல்லாமல் பலத்த சவால்களுக்கு முகங்கொடுத்து அவற்றை வெற்றிபெறச் செய்வதே இன்று தாய் நாட்டுக்காகச் செய்ய வேண்டிய பணிவரலாற்றில் இடம்பெற்ற குறைகளை சரிசெய்து தாய் நாட்டுக்காக புதிய பயணத்தை மேற்கொள்வதற்கு நாட்டின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் இன்று ஒன்றுபட்டுள்ளன.

எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும் நாட்டினதும் மக்களினதும் வெற்றிக்காக அப்பயணத்தைத் தொடர்ந்தும் முன்கொண்டு செல்வோம்.

நாங்கள் முன்னெடுப்பது இலகுவான காரியமல்லமிகவும் கஷ்டமான காரியத்தையே முன்னெடுத்துச் செல்கின்றோம். பிரிவினையைப் பார்க்கிலும் ஓற்றுமை முக்கியமானதாகும்.

இலங்கையின் வரலாற்று அடிப்படைகளையும் சிரேஷ்ட கலாசாரம் மற்றும் கீர்த்திமிக்க வரலாற்றுப் பாரம்பரியங்களையும் பேணி அரசர்கள் காலத்திலிருந்த ஸ்ரீலங்காவின் கீர்த்தியை மீண்டும் நாட்டில் ஏற்படுத்தி ஒரு ஐக்கிய நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.