2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டப் பிரேரணையை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
பொருளாதார அபிவிருத்தி பற்றி அபிலாஷைகளுடன் வரவுசெலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று 10.11.2016 பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஏழு சதவீதத்திற்கு மேலான பொருளாதார வளர்ச்சியைமுன்னெடுப்பதற்காக இலங்கை பூகோள பொருளாதார மத்திய நிலையமாக மாற்றியமைக்கப்படும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கமும் தனியார் துறையும் இணைந்து முதலீட்டு வலயங்களை ஸ்தாபிக்க இருப்பதாக கூறிய நிதியமைச்சர் . விவசாயத் துறையின் அபிவிருத்தி மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
அரச துறையின் வினைத்திறனை மேம்படுத்துவதன் ஊடாக மக்கள் சார்பான சேவைகளை வழங்குவதை இலக்காகக் கொண்ட அரச துறைக்கான சுட்டெண்ணும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
# பல அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு.
# மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான பல்வேறு யோசனைகளும் இம்முறை வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளன.
# ஒரு கிலோ பயறு 15 ரூபாவினாலும், ஒரு கிலோ பருப்பு 10 ரூபாவினாலும் குறைக்கப்படும்.
# ஒரு கிலோ உருளைக் கிழங்கு, நெத்தலி என்பனவற்றின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்படும்.
# ஒரு கிலோ சீனியின் விலை 2 ரூபாவினாலும் குறைக்கப்படும்
# ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் விலை 5 ரூபாவினாலும் சமையல் காஸ் சிலிண்டரின் விலை 25 ரூபாவினாலும் குறைக்கப்படும்.
# அத்தியாவசிய மருந்து வகைகளின் விலை 40 சதவீதத்தினால் தற்;சமயம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
# உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒரு ரின் மீனின் விலை 125 ரூபாவிற்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்பட இருக்கின்றது.
# 100 லக் சதொச கிளைகள் ஆரம்பிக்கப்பட இருப்பதாக நிதியமைச்சர் கூறினார்.
# பெருந்தோட்டத்துறையில் 25 ஆயிரம் வீடுகள்
நடுத்தர வருமானம் பெறுவோருக்காக ஐந்து லட்சம் வீடுகளும் குறைந்த வருமானம் பெறுவோருக்காக 2 ;லட்சத்து 50 ஆயிரம் வீடுகளும் அமைக்கப்பட இருக்கின்றன.
பெருந்தோட்டத்துறையின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 25 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட இருக்கின்றன. வீடுகளை அமைப்பதற்கான காணிகளை அரசாங்கம் வழங்க இருக்கின்றது.
# விவசாய உற்பத்திகளுக்கு சிறந்த விலை.
விவசாயிகளின் உற்பத்திகளுக்கு சிறந்த விலையை வழங்குவதன் மூலம் அவர்களை கடன் சுமையில் மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயக் கூட்டுறவு நிலையங்களை ஸ்தாபிப்பதற்காக விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தல், உயர்ந்த பட்ச வினைத் திறனைப் பெற்றுக்கொள்வதற்கு உதவுதல், பயிர்ச்செய்கைக்கான காணிகளை வழங்குதல் என்பனவும் இதில் அடங்கும். றப்பறை மீளப் பயிரிடுவதற்காக 90 கோடி ரூபா மானியமாக வழங்கப்படவுள்ளது.
சீனிக் கைத்தொழி;லை அபிவிருத்தி செய்வதற்காக முன்வருமாறு அமைச்சர் உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
மட்டக்களப்பு, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய சீனி உற்பத்தித் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன.
# பசும்பால் உற்பத்தி ஊக்குவிப்பு.
பசும்பால் உற்பத்தியும் ஊக்குவிக்கப்பட இருக்கின்றது. இதற்கென 40 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறினார். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 400 கிராம் பால் மா பைக்கட் 295 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும்.
கடற்றொழில் உற்பத்திகளை எதிர்வரும் மூன்று வருடங்களுக்கும் ஐந்து வருடங்களுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் ஐந்து மடங்கினால் அதிகரிப்பது இலக்காகும். ஏற்றுமதி வருமானத்தை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும். இதற்கென 50 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ கோழி இறைச்சிக்கான உயர்ந்த பட்ச சில்லறை விலை தளர்த்தப்பட்டுள்ளது. ஒரு கோழி இறைச்சியின் விலையை 420 ரூபா என்ற மட்டத்தில் பேணுமாறு நிதியமைச்சர் வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்தார். கால்நடை உணவு உற்பத்திக்காக சோளத்தைப் பயிரிடும் திட்டம் விஸ்தரிக்கப்படவுள்ளது.
# ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இலவச டப் கணினிகள்.
இம்முறை வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் கல்வித் துறைக்கு ஆயிரத்து 784 கோடி ரூபா மேலதிக நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
உயர்;தரம் பயிலும் மாணவர்கள் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேருக்கும், ஆசிரியர்கள்
28 ஆயிரம் பேருக்கும் டப் கணனிகள் வழங்கப்படும் என்று அமைச்சர் கூறினார். இதற்கென 500 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு வை-பை வசதிகளை வழங்குமாறு அமைச்சர் சகல தொலைபேசி சேவை வழங்குனர்களையும் கேட்டுக்கொண்டார்.
நாடு பூராகவும் உள்ள 3 ஆயிரத்து 500 பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன. இதன் கீழ் ஒரு பாடசாலைக்கு ஐந்து கணனிகள் வழங்கப்படும். இதற்காக 500 கோடி ரூபா ஒதுக்கப்படவுள்ளது.
# சகல பாடசாலை மாணவர்களுக்கும் சேமிப்பு கணக்குகள்.
# அடுத்த வருடம் ஜனவரி மாதம் 8ஆம் திகதி முதல் சகல பாடசாலை மாணவர்களுக்கும் சேமிப்புக் கணக்கு ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. தரம் ஐந்து முதல் 19 வயது வரையிலான பிள்ளைகளுக்கு 2 லட்சம் ரூபா உயர்ந்த பட்ச காப்புறதியும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
# பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டளவில் 100 சதவீதத்தால் அதிகரிக்கப்படும். இதற்கு அமைவாக அரசாங்கப் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 50 ஆயிரம் வரை அதிகரிப்பது இலக்காகும்.
# குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் மக்களின் வீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுகாண இம்முறை வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் பல்வேறு யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
# நடுத்த மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்காக ஏழரை இலட்சம் வீடுகள்.
# வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் மக்களின் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய அடுத்தாண்டில் 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட இருக்கின்றன. இதற்கென 500 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 15 வருடங்களுக்கு மேல் அரசாங்கத்திற்கு ;சொந்தமான வீடுகளில் வசிப்பவர்களுக்கு அவற்றைச் சொந்தமாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த வருடம் ;ஜனவரி மாதம் 8ஆம் திகதி முதல் இந்த வேலைத்திட்டம் அமுலாகும்.
# பாடசாலை மாணவர்களை ஏற்றுச்செல்லும் வாகன போக்குவரத்தை சீராக்க நடவடிக்கை.
# பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வான் சொந்தக்காரர்;களுக்கு 32 ஆசனங்களைக் கொண்ட பஸ் வண்டிகளைக் கொள்வனவு செய்வதற்கான ஊக்குவிப்பும் வழங்கப்பட இருக்கின்றது. சலுகை வட்டியின் அடிப்படையில் 75 சதவீதமான நிதி இதற்காக வழங்கப்படும். வரவுசெலவுத்திட்டத்தில் இருந்து இதற்கென 15 கோடி ரூபா ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
# முச்சக்கர வண்டிகளுக்காக பதிலாக மின்சாரக் கார் பயன்பாடு ஊக்குவிக்கப்பட இருக்கின்றது. முச்சக்கர வண்டிகள் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வான்; என்பன ஒழுங்குறுத்தப்படும் என்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறினார்.
# சமுர்த்தி வேலைத்திட்டம் ஜன இசுறு என்று பெயர்மாற்றம் செய்யப்பட இருக்கின்றது. அக்ரஹார காப்புறுதியில் ஓய்வூதியம் பெறுவோருக்கு வாழ்நாள் பூராகவும் அலுகூலங்களை வழங்க இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
# சுற்றாடல் நேய எரிசக்தி பயன்பாடு
சுற்றாடல் நேய எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்க அரசாங்கம் திட்டமிடுகிறது. இந்த நோக்கத்துடன், புதுப்பிக்கக்கூடிய மின்வலுவை உற்பத்தி செய்வதற்காக தருவிக்கப்படும் இயந்திரங்கள் தொடர்பிலான வட் வரி நீக்கப்படும்.
# தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பெறுமதியான உலோக இறக்குமதி மீது வட் வரி விதிக்கப்படவுள்ளது.
மதுசார இறக்குமதி மீது வரி
நாட்டில் சட்டவிரோத மதுபான புழக்கத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக பாதுகாப்பு ஸ்டிக்கர் முறை அமுலாக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார். மதுசார இறக்குமதி மீது வரி விதிக்கப்படவுள்ளது. ஒரு லீற்றருக்கு 25 ரூபா என்ற அடிப்படையில் வரி விதிப்பு மேற்கொள்ளப்படும்.
# எரிபொருள் வாகனங்களுக்கு காபன் வரி
எரிபொருளை பயன்படுத்தும் சகல வாகனங்களுக்காகவும் காபன் வரி விதிக்கப்படவுள்ளது.
# இறக்குமதி பொருட்களுக்கு செஸ் வரியில் இருந்து விலக்களிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதற்கட்டமாக 100 பொருட்களுக்கள் மீதான செஸ் வரி நீக்கப்படும்.
# நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கையில் வழக்கு கட்டணம் ஒன்றை அறவிடுவதற்கும் யோசனை கூறப்பட்டுள்ளது. வீதி போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கான குறைந்தபட்ச அபராதம் இரண்டாயிரத்து 500 ரூபாவாக இருக்கும்.
# தவறிழைக்கப்படுமிடத்தில் அபராதம் செலுத்தக்கூடியவாறு மோட்டார் வாகன போக்குவரத்து சட்டம் திருத்தப்படவுள்ளது. அபராதத் தொகையை செல்போன் ஊடாக செலுத்தலாம்.
# தமிழ், சிங்கள மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட வெளிநாட்டு தொலைக்காட்சி நாடகங்கள் தொடர்பிலான கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.
Post a Comment