முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் C.E.B உப அலுவலகம் அமைக்க நடவடிக்கை - அன்வர்

திருமலை மாவட்டத்தின், தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவிற்கான அபிவிருத்தி குழுக் கூட்டம் (08.11.2016ஆந்திகதி - செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணியளவில் பிரதேச செயலக கேட்போர்கூட மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராஜசிங்கம் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. 

இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் குழுத்தலைவருமான ஆர்.எம். அன்வர் உட்பட திணைக்களங்களங்களின் தலைவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மாகாண சபை உறுப்பினர் அன்வரினால் பின்வரும் யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

01. இலங்கை மின்சார சபைக்கான(C.E.B) உப அலுவலகம் ஒன்றினை பொதுமக்களின் நலன் கருதி முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தல்.

02. பொதுமக்களின் தபால்த்தொடர்பாடல் நலன்கருதி முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் உப அலுவலகம் ஒன்றினை நிறுவதற்கு நடவடிக்கை எடுத்தல்.

03. புகாரி நகர் ஊடாக சதாம் நகருக்குச் செல்லும் பிரதான வீதிக்கு குறுக்காக அமையப்பெற்றுள்ள புகையிரதப் பாதையை செப்பனிடக்கோரால்.

04. தாயிப் நகர் பிரதான வீதிக்கு குறுக்காக அமையப்பெற்றுள்ள புகையிரதப் பாதையை செப்பனிடகோரால்.

05. தாயிப் நகர், மீரா நகர் மற்றும் முள்ளிப்பொத்தானை கிழக்கு பிரதேசங்களில் மீள் குடியேற்றம் சம்பந்தமான அறிக்கையை சமர்ப்பிக்க கோரல்.

06. கடவான, அட்டவான பிரதேச மேய்ச்சல் நிலத்திற்கான முன்னேற்ற அறிக்கையை தெளிவுபடுத்துவதுடன் அதை விரைவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தல்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.