மோட்டார் சைக்கிள்களுக்கு தண்டப் பணம் பொறுத்தமற்றது- மோட்டார் சைக்கிள் சங்கம்

அதிக வேகம், இடது பக்கத்தால் முற்படுத்தல் போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு 25000 ரூபா தண்டப் பணம் அறவிடும் வரவு செலவுத் திட்ட யோசனையை மீள் பரிசீலனைக்குட்படுத்துமாறு அகில இலங்கை மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் சங்கம் நிதி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சர்வதேச தரத்துக்கு ஏற்ப வேகக் கணிப்பு கருவிகள் இல்லாத நிலையில் இந்த தண்டப் பணத் தீர்மானம் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை அசௌகரியங்களுக்கு உட்படுத்துவதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த தண்டப் பணத்தின் மூலம் குறைந்த வருமானம் உடையவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவாகும். வாகனங்களின் தராதரம் பார்த்து தண்டனைகளை நடைமுறைப்படுத்துமாறும் அச்சங்கம் அனுப்பியுள்ள கடிதம் மூலம் கேட்டுள்ளது.  

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.