மத்திய வங்கியின் முறி கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பில் பிரதமர் இராஜினாமா செய்யாது போனால், அரசாங்கத்திலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என மஹிந்த குழு சார்பு எம்.பி. பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கண்டும் காணாது ஸ்ரீ ல.சு.கட்சி அமைச்சர்கள் இதன் பிறகும் ஒட்டியிருப்பார்களாயின், சமூகத்துக்கு சகலரும் பொறுப்புச் சொல்ல வேண்டும். அவர்களுக்கு அரசாங்கத்துடன் இருந்துகொண்டு அவர்களைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்க முடியாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்