காத்தான்குடி நகரசபையின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதிநாள் நிகழ்வு

-எம்.ரீ. ஹைதர் அலி
2016ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாதம் மற்றும் உள்ளூராட்சி மாதம் ஆகியவற்றின் இறுதிநாள் வைபவம் (03.11.2016ஆந்திகதி வியாழக்கிழமை) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் காலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வுகளின் ஒரு அங்கமாக காலை 9.00 மணி முதல் நன்பகல் 12.00 வரை புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது. காத்தான்குடி நகரசபையின் செயலாளர் SMM. ஸபி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இக்கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தார்.  

புத்தகங்கள் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துவதனூடாக வாசிப்பு பழக்கத்தினை அதிகரிக்கும் நோக்கில் காத்தான்குடி பொது நூலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் பல்வேறு பிரிவுகளில் பயனுள்ள பல புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. 


Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.