இனிமேல் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் கிடையாது - மனோ கணேசன்

இலங்கையில் இனிமேல் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுகள் நடக்காது என்று அமைச்சர் மனோ கணேசன் திட்டவட்டமாக உறுதியளித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்த ஆவா குழுவின் உறுப்பினர்கள் சிலர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்றுக் காலை குறித்த இளைஞர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து அமைச்சர் மனோ கணேசனின் அலுவலகத்தில் அவரைச் சந்தித்து உரையாடியிருந்தனர்.
இதன்போது கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களுக்கு எதிரான பயங்கரவாத தடைச்சட்டத்தை விலக்கிக் கொள்ள உதவுமாறு அவர்கள் அமைச்சரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர்.
இது குறித்து நேற்று மாலை கூடிய ஐ.தே.முன்னணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அமைச்சர் மனோ கணேசன் விரிவாக எடுத்துரைத்திருந்தார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ள ஆவா குழு சந்தேக நபர்களான இளைஞர்கள், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழிருந்து அகற்றப்பட்டு சாதாரண சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார்கள் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இனிவரும் காலங்களில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எந்தவொரு நபரையும் கைது செய்வதில்லை என்றும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இத்தகவலை அமைச்சர் மனோ கணேசன் தன் பேஸ்புக் பக்கத்தில் பதிந்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.