நேற்று மஞ்சள் பத்திரிகை ரேஞ்சுக்கு போன பாராளுமன்ற விவாதம் - வேலி பாய்ந்த M.P


ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொது எதி­ர­ணியைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹ­லிய ரம்­புக்­வெல்ல வேலி  பாய்ந்­தமை குறித்து ஆளும் தரப்பு உறுப்­பி­னர்கள் கேள்வி எழுப்­பி­ய­மையால் சபையில் கடு­மை­யான சர்ச்சை ஏற்­பட்­டது.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை தேசிய கொள்­கைகள் மற்றும் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சு, நீதி, சட்டம் ஒழுங்கு மற்றும் தென்­மா­காண அபி­வி­ருத்தி தலைப்­புக்கள் மீதான குழு நிலை விவா­தத்தில் உரை­யாற்­றிக்­கொண்­டி­ருந்த ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொது எதி­ர­ணியைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹ­லிய ரம்­புக்­வெல்ல, 2017ஆம் ஆண்­டுக்­கான வரவு–செல­வுத்­திட்­டத்தை மிகவும் கடு­மை­யாக சாடிக்­கொண்­டி­ருந்தார்.

அவ­ரு­டைய உரையில், பொதுமக்கள் மீது வரி­ சு­மத்­தப்­படும் ஒரு வரவு–செல­வுத்­திட்­ட­மா­கவே உள்­ளது. இதற்கு எவ்­வாறு மனச்­சாட்­சி­யுடன் வாக்­க­ளித்­தீர்கள் என்­ற­வாறு கடு­மை­யாக சாட ஆரம்­பித்தார்.

அச்­ச­ம­யத்தில் பொது­மக்­களின் பணத்தை வீண­டிக்­கா­தீர்கள் என்ற வார்த்­தைப்­பி­ர­யோ­கத்தை உச்­ச­ரித்­ததும் ஆளும் தரப்பு உறுப்­பி­னர்கள் கூக்­குரல் எழுப்ப ஆரம்­பித்­தனர்.

குறிப்­பாக அமைச்சர் சரத் ­பொன்­சேகா, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான நளின் பண்­டார, ஹெக்டர் அப்­பு­ஹாமி, ஆனந்த அளுத்­க­மகே ஆகியோர் இடை­யீ­டு­களைச் செய்­த­வாறே இருந்­தார்கள்.

இருப்­பினும் கூக்­கு­ர­லுக்கு மத்­தியில் தனது உரை­யைத்­தொ­டர்ந்த கெஹ­லிய எம்.பி. சிறைக்­கை­தி­களின் உரி­மைகள் தொடர்­பாக கேள்­வி­யெ­ழுப்­பினார். குறிப்­பாக கைதி­யொ­ருவர் சிகிச்­சைக்குச் செல்­லும்­போது அவரை திருப்பி அனுப்­பு­வது நியா­யமா? மனி­தா­பி­மானம் இல்­லாது ஏன் செயற்­ப­டு­கின்­றீர்கள் என கேள்வி எழுப்­பினார்.

இதன்­போது குறுக்­கீடு செய்த அமைச்சர் சரத்­பொன்­சேகா, எனக்கு அப்­படி அநீதி நடக்­கும்­போது நீங்கள் எங்­கி­ருந்­தீர்கள்? என்ன செய்து கொண்­டி­ருந்­தீர்கள்? அப்­போது அது நினை­வுக்கு வர­வில்­லையா என கடும் தொனியில் கேட்டார்.

அத­னைத்­தொ­டர்ந்து பதி­ல­ளித்த கெஹ­லிய எம்.பி. உங்­க­ளுக்கு நோய் எதுவும் இருக்­க­வில்லை. உங்­க­ளுக்கு இருந்த வியா­திக்கும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மருத்­துவம் செய்­து­விட்டார். தற்­போது உங்­க­ளுக்கு இருப்­பது வேறு வகை­யான நோய். அதற்கு என்­னிடம் மருந்து இல்லை. அதனைத் தீர்க்­கவும் முடி­யாது என்று கூறி­ய­வாறு தனது உரையை தொடர்ந்தார்.

இதை­ய­டுத்து எழுந்த அமைச்சர் சரத் பொன்­சேகா, மீண்டும் குறுக்­கீடு செய்ய ஆரம்­பித்தார். ஒழுங்­குப்­பி­ரச்­சினை கோரிக்­கையை முன்­வைத்தார். எனினும் அவ­ருக்கு அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை.

இந்த சம­யத்தில் ஒழுங்குப் பிரச்­சி­னை­யொன்றை எழுப்­பிய ஐக்­கிய தேசியக் கட்­சியின் நளின் பண்­டார எம்.பி. இவர் (கெஹ­லிய) வேலி பாயப்போய் சிக்கல் ஏற்­பட்­டது.

அதற்­காக சிகிச்­சை­ய­ளிப்­ப­தற்கு மக்­களின் பணம் பயன்­ப­டுத்­தப்­பட்­டு­ள­்ளது. அதனை மறந்து விட­வேண்டாம் என்றார். தொடர்ந்து ஒழுங்குப் பிரச்­சி­னை­யொன்றை எழுப்­பிய பிர­தி­ய­மைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க, கெஹ­லிய எம்.பி. எங்கு பாய்ந்­தாலும் எமக்கு பர­வா­யில்லை. ஆனால், சிகிச்­சைக்­காக மக்­களின் பணம் 109 இலட்சம் ரூபா செல­வி­டப்­பட்­டுள்­ளது.

நாம் அதனைத் தான் தவறு என கூறு­கிறோம். அதனைக் கவ­னத்தில் கொள்­ள­வேண்டும் என பிரதி சபா­நா­யகர் திலங்க சுமதிபால­வி­டத்தில் கோரிக்கை விடுத்தார்.

அதன்­போது புன்­ன­கைத்­த­ப­டியே கெஹ­லிய எம்.பி. பதி­ல­ளிக்­க­லானார்., ஆண் விப­சா­ரி­யாக இருப்­ப­தை­விட நான் செய்­தது மேலான விடயம். வய­து­போன ஒரு­வரை தேடித்­த­ரு­கிறேன். அப்­போது உங்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள நோய் தீர்ந்து விடும் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்­கவைப் பார்த்துக் கூறினார்.

இதனால் சபையில் அமைதி குலைந்­தி­ருக்­கையில் ஒழுங்­குப்­பி­ரச்­சி­னையை ஆனந்த அளுத்­க­மகே எம்.பி எழுப்­பினார். அவர் தனது ஒழுங்குப் பிரச்­சி­னையில், நீங்கள் கூறு­வது சரிதான் உறுப்­பி­னரே, நீங்­களும் கண்­டி­மா­வட்­டத்தைச் சேர்ந்த பிர­தி­நிதி. நானும் அதே மாவட்­டத்தைச் சேர்ந்த பிர­தி­நிதி. என்­னி­டத்தில் ஒரு வினா­வுள்­ளது. அதற்கு பதி­ல­ளிப்­பீர்கள் என்று எதிர்­பார்க்­கின்றேன். உறுப்­பி­னரே, கதவு இருக்கும் போது, எதற்­காக ஜன்­னலின் ஊடாகப் பாய்ந்­தீர்கள் என்றார்.

இச்­ச­ம­யத்தில் ஆளும் தரப்பு உறுப்­பி­னர்கள் அனை­வரும் பலத்த ஓசை­யுடன் சிரித்­தனர். மேசை­களில் கைகளால் தட்­டினர். குறிப்­பாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சில­நொ­டிகள் மேசையில் தட்டி சிரித்­த­வாறே இருந்தார்.

எனது உரையைக் குழப்­பா­தீர்கள் எனக்­கேட்­டுக்­கொண்டு தொடர்ந்த கெஹ­லிய எம்.பி. ஆளும் தரப்பு உறுப்­பி­னர்­க­ளுக்கு வேலி பாய்­வ­தற்கு சக்தி இல்லை. அத்­தோடு உங்­க­ளுக்கு இல்­லாத அவ­சரம் எனக்கு இருக்கிறது. நீங்கள் அந்த வேலைக்கு தயாராவதற்கு மூன்று மணிநேரம் எடுக்கும். எனக்கு அப்படியில்லை என்றார்.

இதனையடுத்து ஆளும் தரப்பு உறுப்பி னர்கள் கெஹலிய எம்.பி.யை உரையாற்ற விடாது குரலெழுப்பிக்கொண்டிருந்தனர். அச்

சமயத்தில் கெஹலிய எம்.பி.க்கு ஒதுக்கப் பட்ட நேரம் நிறைவடைந்து விட்டது. உரையை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று பிரதி சபாநாயகர் கூறியதோடு சபையில் அமைதியை பேணுமாறும் உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.