பருவமடைவதற்கு முன்னரே உரசப்படும் பெண்களின் உடல்கள் - அதிர்ச்சி தரும் தகவல்கள்

தெற்காசியாவின் மிகப்பெரிய சிவப்பு விளக்கு பகுதி கொல்கத்தாவில் உள்ள சோனாகாச்சி தான். இங்கு மட்டும் 1.3 லட்சம் பாலியல் தொழிலாளிகள் உள்ளனர்.
இதில் 18 வயதுக்கு குறைவான சுமார் 12 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுமியர் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் வற்புறுத்தலின் பேரில் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்படுவதாகவும், இங்கு பாலியலுக்காக குழந்தைகள் விற்கப்படுவதாகவும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மேலும், இங்குள்ள பெண்கள் பருவமடைவதற்கு முன்னரே நாளொன்றுக்கு 2 டொலர்கள் வருமானத்துக்காக பாலியலில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த சட்டவிரோதமான பாலியல் குற்றச் செயல்களின் பின்னணியில் பெரிய பாலியல் குழுவொன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறதாம்.
இந்நிலையில் இந்திய பிரதமர் மோடியின் பழைய 500, 1000 ரூபாய் ஒழிப்புத் திட்டம் மற்ற மக்களுக்கு திண்டாட்டமாய் இருந்தாலும், சோனாகாச்சியில் உள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு கொண்டாட்டமாய் உள்ளது.
இவர்கள் பழைய 500 மற்றும் 1000 நோட்டுகளை மறுக்காமல் பெற்றுக் கொள்வதால் இங்கு பாலியல் தொழில் சூடு பிடித்துள்ளது.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் இங்குள்ள் பாலியல் தொழிலாளிக்கு நல்ல வருமானம் கிடைத்துள்ளதாம்.
கடந்த சில நாட்களில் மட்டும் இரண்டு லட்ச ரூபாய் அளவிற்கு அவர்கள் வருமானம் பார்த்துள்ளார்களாம்.
வழக்கமாக பாலியல் தொழிலாளிகள் தங்களது தினசரி வருமானத்தை அன்றைய செலவுகளுக்கு பயன்படுத்தி விடுவர்.
ஆனால், கடந்த சில தினங்களில் அதிகளவு பணம் கிடைத்ததால் அவற்றை பாலியல் தொழிலாளிகள் அமைத்துள்ள உஷா பல்நோக்கு கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.