தேசிய ஒற்றுமையை சீர்குலைக்க இடமளிக்கப் போவதில்லை - பிரதமர்

நாட்டில் மீண்டும் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில், இன, மத முரண்பாடுகளை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
30 வருட கொடூர யுத்தத்திற்குப் பின்னர் இனங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள ஒற்றுமை மற்றும் சமாதானத்தை சீர்குலைக்க இடமளிக்க முடியாது என்று தெரிவித்துள்ள பிரதமர், இனங்களுக்கிடையிலான சமாதானத்தை குழப்ப முற்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்தார்.
குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த சில நாட்களாக மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி வன்முறைகளை தூண்டிய ”சிங்கள மக்களின் பாதுகாவலன் என தன்னை அழைத்துக்கொண்ட டான் பிரயசாத் என்ற நபரை, கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் சிலரே தூண்டிவிட்டதாக குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இனியும் நாட்டில் இடமளிக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்த பிரதமர், நாட்டில் தற்போது நிலவும் சுதந்திரத்தை பயன்படுத்தி இவ்வாறான செயல்களில் ஈடுபட அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
அதேவேளை சில ஊடங்களும் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டிய பிரதமர், மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைவதற்காக சில ஊடகங்கள் இவ்வாறு நடந்துகொள்வதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதனால் ஊடகங்களின் செயற்பாடுகள் தொடர்பில் மறுபரீலினை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.