ஸ்ரீ ல.சு.கட்சியின் தலைமைக்கு மஹிந்தவை நியமிக்குமாறு கோரி மனு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக்குமாறு முன்வைக்கப்பட்ட மனு எதிர்வரும் 14 ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொரலஸ்கமுவ கே.டீ. அருன பிரியஷாந்த, மத்தேகொட அசங்க நந்தன ஆகியோர் இந்த மனுவை முன்வைத்துள்ளனர்.
இந்த வழக்கின் பிரதிவாதியாக ஸ்ரீ ல.சு.க.யின் முன்னாள் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கட்சிக்கு தலைவர் ஒருவரை நியமிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றின் மூலம் கோரிதனால், கட்சியின் முன்னாள் செயலாளர் தவறிழைத்துள்ளார் என மனுதாரர் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.