நாளை SLTJ நடத்தும் முஸ்லிம் தனியார் சட்­ட திருத்­த ஆர்ப்பாட்டத்தை நிறுத்த வேண்டும் - மீறினால் விரட்­டி­ய­டிப்போம் BBS


தௌஹீத் ஜமாஅத் அமைப்பு நாளை 3ஆம் திகதி ஏற்­பாடு செய்­துள்ள முஸ்லிம் தனியார் சட்­ட திருத்­தத்­திற்கு எதி­ரான ஆர்­பாட்­டத்தை நிறுத்­திக்­கொள்­ள­ வேண்டும். இந்த ஆர்ப்­பாட்­டத்தை அர­சாங்கம் தடை­செய்ய வேண்டும். தடை­செய்­யப்­ப­டா­விட்டால் நாம் அவர்­களை விரட்­டி­ய­டிப்போம் என பொது­ப­ல­சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்று கிரு­லப்­பனை பௌத்த மத்­திய நிலை­யத்தில் நடை­பெற்ற பொது­ப­ல­சே­னாவின் ஊடக மாநாட்டில் கலந்துகொண்ட அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சா­ர­தேரர் இவ்­வாறு சவால் விடுத்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,

தௌஹீத் அமைப்பு எமது பௌத்த நாட்டில் ஷரீஆ தொடர்­பான ஆர்ப்­பாட்­டங்­களைச் செய்­ய­மு­டி­யாது. அவ்­வாறு ஆர்ப்­பாட்டங்கள் செய்­ய­வேண்­டு­மென்றால் அவர்கள் சவூதி அரே­பி­யா­வுக்குச் செல்­ல­வேண்டும்.

தௌஹீத் ஜமாஅத் நாட்டில் இன­மு­ரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டு­க­ளையே முன்­னெ­டுக்­கின்­றது. இவற்­றுக்கு எதி­ராக எந்­தவோர் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும் குரல் கொடுப்­ப­தில்லை. நாட்டில் 64 காதி நீதி­மன்­றங்கள் முஸ்­லிம்­க­ளுக்­கென்று இயங்கி வரு­கின்­றன. இவற்­றுக்கு எங்­களின் பணமே செலவு செய்­யப்­ப­டு­கி­றது.

இலங்­கையில் ஷரீஆ சட்­டத்தை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. இன்று வங்­கி­களில் ஷரீஆ பிரி­வுகள் ஆரம்­பிக்­கப்­ப­டு­கின்­றன. வங்­கி­களை ஷரீஆ வங்­கி­க­ளாக்கி முஸ்லிம் பெண்­க­ளுக்­கென்று தனி­யான கருமபீடங்களை அமைக்­கு­மாறு கேட்­கி­றார்கள். இது என்ன நியாயம்?

3000க்கும் மேற்­பட்ட அரபு மத்­ர­ஸாக்கள் இயங்கி வரு­கின்­றன. மாண­வர்­க­ளுக்கு அரபு மாத்­தி­ரமே போதிக்­கப்­ப­டு­கி­றது. முஸ்லிம் மாண­வர்கள் சிங்­கள மொழி படிப்­பது கட்­டா­ய­மாக்­கப்­ப­ட­வேண்டும். நாட்டின் சட்­டங்­களும் படிப்­பிக்­கப்­பட வேண்டும். ஏன் முஸ்­லிம்­களால் சிங்­களம் படிக்க முடி­யாது. அரபு மொழி மாத்­திரம் படிப்­பதற்கு இலங்கை ஒரு அரபு நாடல்­லவே. எமது நாட்டின் சட்­டங்­க­ளையும், எமது கலா­சா­ரங்­க­ளையும் மதித்து இங்கு வாழ முடி­யு­மென்றால் இருங்கள். இல்­லையேல் நாட்டை விட்டும் வெளி­யேற தயா­ராக இருங்கள்.

அளுத்­கம சம்­ப­வத்­துடன் பொது­ப­ல­சே­னாவே சம்­பந்­தப்­பட்­டது என்று தெரிவிக்கிறார்கள். ஐ.நா. பிரதிநிதியிடம் எம்மை குற்றம் சுமத்தியே அறிக்கை சமர்ப்பித்துள் ளார்கள். இதன் பின்னணியில் யார் இருந் தார்கள் என்பதைக் கண்டறியுமாறு நாம் அரசாங்கத்திடம் கோருகிறோம் என்றார்.

அதேவேளை.
கடந்த ஆட்சியாளர்களால் ஸ்ரீபாத என்ற புனித பிரதேசம் சவுதி நாட்டிற்கு விற்பனை செய்யப்பட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கண்டுபிடிக்க கூட முடியாத அளவுக்கு காணாமல் போயிருந்த, பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

ராஜபக்சர்களினால், சவுதி வர்த்தகர்களுக்கு விற்பனை செய்த ஸ்ரீபாத காணியில் முன்னெடுக்க திட்டமிட்ட ஹோட்டல் நிர்மாணிப்பு நடவடிக்கைகளை தடை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டிருந்தார்.

இவ்வாறான அதிரடி நடவடிக்கையின் பின்னர் ஒளிந்திருந்த ஞானசார தேரர், இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஞானசார தேரர்,

நாட்டில் இடம்பெறுகின்ற பாரிய காணி கொள்ளைக்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் பைஸர் முஸ்தப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புபட்டுள்ளனர்.

எனவே அவரை அமைச்சு பதவியில் இருந்து நீக்கி, கைது செய்து சட்டத்தை செயற்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.