முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தை எதிர்த்து SLTJ பாரிய ஆர்ப்பாட்டம் (Video + Photos)


ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஆத்  இன்று (3)  ஏற்பாடு செய்த  ஜி.எஸ்.பி சலுகைக்காக முஸ்லீம் தனியாா் சட்டத்தில் அரசு கை வைப்பதை எதிா்த்து  மாளிகாவத்தையில் உள்ள தவ்ஹீத் தலைமைக்காரியாலயமிருந்து பேரணியாக கோட்டை புகையிரத நிலையத்தை அண்மித்து சென்று கொண்டிருந்தது.
இவ்  மாபெரும் பேரணியும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை பொலிசாா் மாளிகாவத்தை  பொலிஸ் நிலையத்தினை அண்டிய பாதையை வழிமறுத்து பாதைகளை மூடிவிட்டனா். அத்துடன் கலகத்தை அடக்கும் பொலிசாா், வரவழைக்கப்பட்டிருந்தனா்.  மற்றும் நீர்பாய்ச்சி அடிக்கும் பௌசா்களும் வரவழைக்கப்பட்டிருந்தன.
ஆகவே பேரணியின் ஏற்பாட்டாளர்கள் மாளிகாவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் உயா் அதிகாரிகளிடம்  கலந்துரையாடியதையடுத்து வீதியிலேயே மறித்து கண்டன கூட்டத்தினை நடு வீதியில்  நடாத்திய பின்னா்  கலைந்து சென்றனா்.
இங்கு ஸ்ரீலங்கா தவஹீத் ஜமாத்தின் செயலாளா் கருத்து தெரிவிக்கையில் –  அண்மையில் ஜி.எஸ்.பி சலுகை தருவதாயின் முஸ்லீம் விவாக மற்றும் ஷரிஆ சட்டத்தினை திருத்துவதற்கு அமைச்சா் சகால ரத்னாயக்க மற்றம் நீதி அமைச்சா்கள் தலைமையில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளன. ஜரோப்பிய யூணியன் பிரநிதியும்  முஸ்லீம் திருமண வயதினை அதிகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாா்.
இந்த அரசாங்கத்தின் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு முழுக்க முஸ்லீம் வாக்குகள் அளிக்கப்பட்டன. ஆகவே இந்த நாட்டில் வாழும் முஸ்லீம்களது, மதம், அவா்களது உரிமைகள் சட்டங்கள் பாதுகாகக்பபடல் வேண்டும். அவா்களது பரம்பரையாக இருந்து வந்த சட்டங்களில் கைவைக்கக் கூடாது. எனவும் அவா் தெரிவித்தாா்.
அதே நேரம்  கடந்த ஆட்சியில் வில்லன் போல் இருந்து வந்த பொதுபலசேனாவின் முதுகொழும்பு கழற்றப்பட்டுள்ளது. அவா் எமது சட்டம் மதம் உரிமைகள் தெரியாமல் மீண்டும் அவா் எமக்கு எதிராக குரல் எழுப்புகின்றாா். அவா் அவருடைய வரையருக்குள் இருந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டில் தமிழ்  முஸ்லீம், கிருஸ்தவா்கள், ஹிந்து போன்ற இனங்கள் மிகவும் அன்னியோன்னியமாக வாழ்ந்து வருகின்றனா். எனவும்அவா் தெரிவித்தாா்.


Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.