முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்த ஒரு வருட அவகாசம் வேண்டும் - SLTJ ஆர்ப்பாட்த்தில் கோரிக்கை

முஸ்லிம் தனியார் சட்டத்தை இஸ்லாமிய மூலாதாரங்களின் உதவியுடன் திருத்த அரசு ஒரு வருட கால அவகாசம் தர வேண்டும் என ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) அமைப்பு இன்று (11) நடத்திய ஆர்ப்பாட்த்தில் கோரிக்கை முன்வைத்துள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (11) ஜூம்மா தொழுகையின் பின்னர் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டமானது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஜும்மா பள்ளிவாயலில் இருந்து ஆரம்பமாகி சம்மாந்துறை பிரதான (ஹிஜ்ரா) சந்திக்கு அருகாமையில் முடிவடைந்தது.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைக்கும் அரசை கண்டித்து நடத்தப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில் மத தலைவர்கள், அதிகளவான பெண்கள் உட்பட பொது மக்கள் என பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரசுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைக்காதே, முஸ்லிம் தனியார் சட்டத்தில் மூக்கை நுழைப்பதை அனுமதியோம், தனியார் சட்டத்தினை மாற்றச்சொல்ல ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உரிமை இல்லை போன்ற கோஷங்களையும் எழுப்பியுள்ளனர்.
அத்தோடு எங்களது கோரிக்கைகளுக்கு இந்த அரசு செவிசாய்க்கவில்லை எனின் எமது போராட்டம் பல இடங்களிலும் தொடரும் எனவும் கூறியுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.