டான் பிரசாத்தின் கைது செய்யப்பட்டு சிறை - SLTJ யின் ஸ்டேட்மெண்ட்

கடந்த 03.11.2016 அன்று தவ்ஹித் ஜமாத் கொழும்பில் நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக் கணக்கான மக்களை தற்கொலை தாக்குதல் நடத்தியும், தி வைத்து எரித்தும் கொள்ளுவேன் என்று பேசிய டான் பிரசாத் என்பவர் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 07.11.2016 அன்று தவ்ஹீத் ஜமாத் சார்பில் கொழும்பு, கோட்டை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப் பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுத்தம் காரணமாகவும் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் டான் பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

டான் பிரசாத்தை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தலைமையிலான குழுவினர் டான் பிரசாத்துக்கு எதிராக நீதி மன்றத்தில் ஆஜராகிறார்.

தவ்ஹீத் ஜமாத் சார்பில் முன் வைக்கப்பட்ட முறைப்பாட்டில் டான் பிரசாத்தின் இனவாத, கொலை அச்சுருத்தல் விடுக்கும் வீடியோ பதிவுகள் அடங்கிய CD க்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
ஊடகப் பிரிவு - ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ)

நவம்பர்25 வரை சிறை
இனக்குரோத கருத்துக்களை தெரிவித்து வந்த டன் பிரியசாத் என அழைக்கப்படும் தெமட்டகொட சுரேஷ் பிரியசாதை எதிர்வரும் 25 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி றுஷ்டி ஹபீப் தெரிவித்துள்ளார்..

இன்று மாலை கொழும்பு புறக்கோட்டை பொலிஸாரால்  கைது செய்யப்பட்ட அவர் இன்று மாலை  நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை  நீதிபதி கடுமையாக எச்சரித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.