S.L.T.J. செயலாளர் ராசீக், இதுவரைக்கும் கைதாகவில்லை..!! இன்னும் போலிஸில் தான் இருக்கிறார்



S.L.T.J. பொதுச் செயலாளர் இதுவரைக்கும் கைதாகவில்லை என்றும், தற்சமயம் வரை விசாரணைகள் ஆரம்பமாகவில்லை என்றும் S.L.T.J. சார்ப்பில் ஒருவர் மாளிகாவத்தை பொலீஸ் நிலையத்தில் இருந்து தெரிவித்தார்.

என்றாலும் பெரும்பாலான இலத்திரனியல் மீடியாக்கள் அவர் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டிருப்பது குறித்து அவர் ஆச்சரியம் தெரிவித்தார்.

தற்போது வரைக்கும் ராசீக் மீதான விசாரணைகள் ஆரம்பக்கட்டத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

பெரும்பாலும் கைது செய்யப்படும் சந்தர்ப்பங்கள் இருப்பதாகவும், அவ்வாறு கைதானால் இன்று 4.00 மணியளவில் கோர்ட்டில் ஆஜர் செய்யப்படுவர் என்றும் அவர் புத்தளம் டுடேக்கு கூறினார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.