குருணாகல் தெலியாகொன்ன ஜூம்ஆ பள்ளிவாசல் மீது தாக்குதல் - கண்ணாடிகள் சேதம்

குருணாகல் தெலியாகொன்ன பிரதேசத்தில் அமைந்துள்ள தெலியாகொன்ன ஜும்ஆப் பள்ளிவாசல் மீது நேற்றிரவு (04); கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
சுமர் இரவு 12 மணியளவில் இப்பள்ளிவாசலை சுற்றிவளைத்த இனவாதிகள் கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பித்து ஓடியுள்ளனர்.
இத்தாக்குதலின் காரணமாக பள்ளிவாசலினுள் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.
இத்தாக்குதல் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் பள்ளிவாசலின் சில மௌலமார்கள் இருந்துள்ளனர். எனினும் அவர்கள் எவ்வித காயங்களுக்கும் உள்ளாகவில்லை.
இப்பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொள்ள வந்தவர்கள் கெப் ரக வாகனத்தில் வந்துள்ளமை சீசீடீவி கமராக்களில் பதிவாகியுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.