மரண தண்டனை கைதி துமிந்தவின், பேஸ்புக்கை இயக்குவது நான்தான் - திலினி

மரண தண்டனை கைதி துமிந்த சில்வா சிறையில் இருக்கும்போது அவரின் பேஸ்புக் கணக்கு இயங்குவது எவ்வாறு என்பது தொடர்பாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக துமிந்த சில்வாவின் சகோதரி ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

துமிந்த சில்வாவின் பேஸ்புக் கணக்கில் படங்களை பதிவிடுவது, பேஸ்புக் எட்மினிஸ்டர் என்ற வகையில் நான் என திலினி சில்வா தெரிவித்துள்ளார்.

இதனை உரிய முறையில் விசாரிக்காமல் மக்களை தவறாக வழி நடத்தி, ஏமாற்றுவதற்காக பல செய்திகள் வெளியாகுவதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, துமிந்த சில்வாவின் பேஸ்புக் கணக்கில் காணொளி மற்றும் படங்கள் மாத்திரமே பதிவிடப்படுவதுடன், அதில் "Administered by Dilini Silva"என தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது சகோதரி கூறியுள்ளார்.

மேலும், எந்தவொரு பேஸ்புக் பக்கத்திலும் Administered உரிமையுடன், எந்தவொரு நபராலும் அதில் எதனையும் பதிவிட முடியும் என பேஸ்புக் பயன்படுத்தும் எந்த ஒரு நபரும் அறிந்த விடயமே என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.